2.0 audio launch in dubai

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து மிக பிரமாண்டமான பொருட்செலவில் 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் திரைப்படம் 2 . ௦. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மிக பிரமாண்டமாக துபாயில் நடக்க உள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரத்தில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மின் அஞ்சல் மூலம் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளதால் துபாயில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.