2.0 audio launch cost

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக செலவில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. 

இதுவரை படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

மேலும் வரும் அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று துபாயில் நடைபெறவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் படக்குழு ரூ. 12 கோடி செலவு செய்துள்ளதாம்.

இசை வெளியீட்டு விழாவிற்கு இத்தனை கோடி செலவு என்றால் நிகழ்ச்சி ஏற்பாடு எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் பிரம்மிக்க ஆரம்பித்துவிட்டனர்.