2.0 audio launch compaire is bahubali actor

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின், இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக துபாயில் நடக்க உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நடிகை எமி ஜாக்சன் மற்றும் படக்குழுவினர் சென்றுள்ளனர். 

மேலும் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் துபாய் மன்னரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், நடிகர் நடிகைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. 

இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை பாகுபலி நடிகர் ராணா தொகுத்து வழங்க உள்ளதாக அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…