இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சுமார் 500 கோடி ரூபாய் பொருட்செலவில் 3 டி வடிவிலும், 4 டி சவுண்ட் தொழில்நுட்பத்திலும், இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

செல்போன் தொழில்நுட்பம் குறித்த தகவல்களும், அதன் பலன்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 625 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் 2 பாயிண்ட் ஓ திரைப்படம் இன்று வெளியானது.

இதனிடையே, 2 பாயிண்ட் ஓ படத்தின் முதல் காட்சிக்காக அதிகாலையிலேயே திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் காலை 4 மணி காட்சிக்காக வந்திருந்த ரசிகர்கள், ரஜினியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.