Asianet News Tamil

ரஜினிக்கு அவ்ளோதான் மவுசா?

2.0 ரிலீஸான  முதல் நாளிலும், அடுத்தடுத்த நாட்களிலும் பல தியேட்டர்களில் சீட்டுகள் காலியாக இருந்தது. ஷங்கர் படம் அதுவும் ரஜினி படத்திற்கு இந்த நிலையா என கேட்க வைத்துள்ளது. 

2 point o collection and theater response
Author
Chennai, First Published Dec 1, 2018, 10:43 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

2.0 படம் வெளியான இரண்டொரு நாட்களில் டிக்கெட் தாராளமாக கிடைக்கிறது. காரணம் பல தியேட்டர்கள் காற்று வாங்கத் துவங்கிவிட்டடன.  டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையத்தளத்தில் சென்று பார்த்தால் அடுத்த காட்சிக்கு இதுவரை ஒரு சிலரே டிக்கெட் புக் செய்துள்ளார்கள். சென்னையில் இப்படி என்றால் பெங்களூரிலும் அதே நிலைமை தான். ஐநாக்ஸ் மால்,  பி.வி.ஆர். தியேட்டர்களில் பல இருக்கைகள் காலியாக உள்ளன.  அதே போல பாலிவுட் ஜாம்பவான் அக்ஷய்குமாரின் ஊரான மும்பையிலும் 2.0 படம் ஓடும் தியேட்டர்கள்  ஈ ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இது இப்படி இருக்க தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்கம் காற்று வாங்கிக்கொண்டிருப்பதை சிலர் தங்களில் சமூக விலைத்தள பக்கத்தில் பதிவிட்டுருப்பதை மறுப்பதற்கில்லை,

இதோ அந்த அப்படியான ஒரு பதிவு; 

மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.சங்கர் ,ஏ ஆர் ரஹ்மான், அக்ஷய் குமார் போன்ற ஆளுமைகளின் கூட்டணியில் வெளியாகி இருக்கும் இப்படம் 500 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டது என்ற பெருமிதத்தோடு விளம்பரம் செய்யப்பட்டது .

நான் அறிய எனது அனுபவத்தில் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியான முதல் நாள் அன்றே ஹவுஸ்புல் என்று பதாகை போடப்படாத முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். கோச்சடையான் படம் கூட பெரம்பலூரில் ரசிகர் காட்சிக்காக ஒதுக்கப்பட்டு முதல் நாள் முழுக்க அரங்கம் நிரம்பியதாக கூறினார்கள். ஆனால் நேற்று முன்தினம் மதியம் பள்ளி முடிந்து திரும்பும் வேளையில் கிருஷ்ணா திரையரங்கில் பார்த்தபோது பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. மிக இயல்பாக சிரமம் இன்றி படம் பார்க்க செல்லும் பார்வையாளர்களை பார்க்கமுடிந்தது. அரும்பாவூர் அருணா திரையரங்கில் முதல் காட்சி ரசிகர்கள் காட்சியாக இருந்ததால் நிரம்பியதாகவும் அடுத்தடுத்த காட்சிகளில் அரங்கம் நிறையாமல் இருந்தது என்று சொல்கின்றனர். 

நேற்று முன்தினம் பெய்த மழை ஒரு காரணம் பள்ளி கல்லூரித் தேர்வுகள் ஒரு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இந்தியாவின் உச்ச நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிற ரஜினிகாந்திற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக தான் கருத முடிகிறது. இந்த திரைப்படம் குறித்து பல்வேறு நல்ல விமர்சனங்கள், தொழில்நுட்பத்தில், இசையில் கதையில் இன்ன பிற அம்சங்களில் படம் குறித்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. ஆனால் வணிகரீதியில் 500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை தருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. 

இப்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விடயம் கடந்த தீபாவளி அன்று வெளியான விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு ரஜினிகாந்தின் இந்த புதிய திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை என்பதே. பலரின் கருத்து ரஜினிகாந்த் எடுத்த அரசியல் நிலைப்பாட்டின் பின்விளைவு இது என்று சொன்னால் அது மிகையல்ல. எவ்வளவு காலம்தான் இவர் அரசியலுக்கு வருவார் என்று காத்திருப்பார்கள் ரசிகர்கள். 

இந்த திரைப்படத்திற்கு யாரும் கட்அவுட் வைக்கவேண்டாம் என்று ரசிகர்களை ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார் அந்த தொகையை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவு செய்யுங்கள் என்றார். அதன் காரணமாக பல திரையரங்குகளில் கட்டவுட் கலாச்சாரம் சற்று குறைவாகவே இருந்தது என்பதை பாராட்டியே ஆகவேண்டும் .ஆனால் ரசிகர்களின் கொண்டாட்டம் என்பது போதிய அளவில் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அது அவர்களின் விரக்தியின் வெளிப்பாடாகவே நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.விஜயகாந்த், சீமான் போன்று தன்னுடைய அரசியல் முடிவை அவர் தெளிவாக அறிவிக்க வில்லை. சமீபத்திய அவரது அரசியல் முன்னெடுப்புகள் விளிம்பு நிலை மக்கள் சார்ந்து இல்லை எனலாம். கடந்த காலங்களில் பாபா திரைப்படத்தின் தோல்விக்கு அப்போதைய ரஜினியின் அரசியல் நிலைப்பாடு காரணமாக அமைந்தது. 

கட்சி தொடங்குவதாக அறிவித்து ஆண்டுகள் ஓடிவிட்ட போதும் இன்னும் தமது அரசியல் கட்சி தொடக்கம் குறித்து தெளிவான முடிவை அறிவிக்காது அவரது ரசிகர்களை உற்சாக உற்சாகமடையச் செய்யவில்லை.போதாத குறைக்கு தமிழ் ராக்கர்ஸ் வேறு முதல் நாளே இணையதளத்தில் மிகத்தெளிவான பிரிண்டில் படத்தை வெளியிட்டு இடையூறு செய்திருக்கிறது. இனிவரும் காலம் சொல்லும் ரஜினியின் அரசியல் செல்வாக்கை , கலையுலக உச்ச நட்சத்திர அங்கீகாரத்தை எப்படி நிலைநிறுத்த போகிறது என்பதனை..
 

Follow Us:
Download App:
  • android
  • ios