ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகும்  ரிலீஸாக உள்ளது. சுமார் ரூ. 600 கோடி செலவில் தயாரித்துள்ளது இந்த படமானது. கடந்த தீபாவளிக்கு வெளியான சர்க்கார் படத்தின் முதல் நாள் வசூலை நெருங்க படாத பாடுபடும் என திரையுலக முக்கிய புள்ளிகளும் திரையரங்க உரிமையாளர்களும் கூறி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 2.O படம் தமிழகத்தில்அதிகத் திரைகளில் (சுமார் 110 ) வெளியாகும் ஏரியா கோவையும் இரண்டாவது சேலம் (100 தியேட்டர்) ஏரியாவுமாக உள்ளன. சர்கார் படம்போன்று ஒரே ஊரில் பல தியேட்டர்களில் 2.O படம் திரையிடப்படுவதால் சென்னை தவிர்த்து அனைத்து நகரங்களிலும், இரண்டாம் கட்ட ஊர்களிலும் முன்பதிவு 25%-க்கும் குறைவாகவே உள்ளது.

தமிழகம் முழுவதும் 2. 0 படத்தை விநியோக முறையில் கொடுத்திருப்பதால் ஏரியா விநியோகஸ்தர்கள் தியேட்டர்களுக்கு அட்வான்ஸ் முறையில் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். இதனால் 150 ரூபாய்க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் விரும்பவில்லை என்பதால் தமிழகத்தில் 2.O வசூல் சாதனை நிகழ்த்துமா என்பதை சொல்லமுடியாது.

சர்கார் படத்திற்கு முதல் நாள் தமிழகத்தில் 31 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனது. 2.O படத்தினை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்தாலும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூலைக் கடக்குமா என்பது சந்தேகம் தான் என சொல்கிறார்கள்.