’2.0’ தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் படத்தின் பட்ஜெட் 600 கோடி என்று ஓவ்வொரு செய்தியிலும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துவரும் நிலையில், ‘படத்தின் பட்ஜெட் எனக்குத் தெரிந்து 400 கோடிக்குள்தான் இருக்கும்’ என்று தற்காப்பு நடவடிக்கையாக பதில் அளிக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

எதை ஒட்டி ஷங்கருக்கும் நிறுவனத்துக்கும் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது குழப்பமாக உள்ள நிலையில் அதற்கு சிறிய விளக்கம் அளிக்கும் விதத்தில் ‘ஒருவேளை அவர்கள் அதிகப்படுத்திச்சொல்லும் தொகை படத்தின் விளம்பரச்செலவாக இருக்கலாம்’ என்று மழுப்பலாக பதில் அளிக்கிறார் ஷங்கர்.

ஷங்கர் சொல்வது போல் விளம்பரத்துக்கு அவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பது உண்மையெனில் அது இந்திய சினிமாவில் அல்ல, சர்வதேச அளவில் அதிக பட்ஜெட்டில் விளம்பரம் செய்யப்பட்ட படம் என்ற பெருமையை ‘2.0’ பெறும். ஆனால் 400 கோடி பட்ஜெட் படத்துக்கு 200 கோடியில் விளம்பரம் என்பது ஷங்கரின் கிராஃபிக்ஸை விட கொஞ்சம் ஓவரான பில்ட் அப்பாகத்தான் தெரிகிறது.