எந்திரன் படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் 2 . 0 .  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் 10 ,000 திரையரங்குகளில்  வெளியானது. 

இந்நிலையில் 2 . 0 வெளியான நாள் முதல் ஒவ்வொரு நாளும் இந்த படத்தின் வசூல் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. 

அந்த வகையில், பாகிஸ்தானில் 25 திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2 . ௦ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்த வண்ணம் இருந்ததால் தற்போது மேலும் 75  திரையரங்கங்களில் வெளியிடப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. 

மேலும் உலகம் முழுவதும் வார முடிவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக திரைப்பட வினிக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.