Asianet News TamilAsianet News Tamil

எங்ககிட்ட ‘2.0’ வுக்கு எந்த சலுகையும் எதிர்பார்க்காதீங்க... ரஜினி மீது பாயக்காத்திருக்கும் அ.தி.மு.க.

எக்ஸ்ட்ரா காட்சிகள் மற்றும் அதிக விலை வைத்து ஐயாயிரத்துக்கும் பத்தாயிரத்தும் டிக்கட்டுகளை விற்பது போன்ற எந்த சலுகைகளையும் ரஜினியின் ‘2.0’ படத்துக்கு வழங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறதாம்

2.0 movie censored with U/A
Author
Chennai, First Published Nov 14, 2018, 11:49 AM IST

எக்ஸ்ட்ரா காட்சிகள் மற்றும் அதிக விலை வைத்து ஐயாயிரத்துக்கும் பத்தாயிரத்தும் டிக்கட்டுகளை விற்பது போன்ற எந்த சலுகைகளையும் ரஜினியின் ‘2.0’ படத்துக்கு வழங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறதாம் அ.தி.மு.க. அரசு. இது தொடர்பாக தியேட்டர்களுக்கு எந்தமாதிரியான நெருக்கடிகள் தருவது என்பது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம் அரசு. 2.0 movie censored with U/A

வரும் 29ம் தேதி வியாழன்று  திரைக்கு வரும் ஷங்கர், ரஜினி கூட்டணியின் பிரம்மாண்டமான ‘2.0’ நேற்று சென்சார் கிளியரன்ஸ் பெற்று ‘யு.ஏ’ சர்டிபிகேட் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முதல் மெகா பட்ஜெட் படம் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் படம் திரையிடப்படவிருக்கிறது. படத்தின் முதல் நாள் முதல் ஷோ டிக்கட்டுக்களை ரூ.10000 வரை விற்கவும்  திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம். 2.0 movie censored with U/A

‘சர்கார்’ பட விஜய் போலவே ரஜினியும் சமீப காலங்களில் அ.தி.மு.க. அமைச்சர்களை அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார். ‘2.0’ ஆடியோ ட்ரெயிலர் வெளியீட்டு விழாவிலும் ‘லேட்டா வந்தாலும் கரெக்டா வந்து அடிக்கணும்’ என்று அரசியல் பேசியிருந்த ரஜினி ‘சர்கார்’ மறு சென்ஸார் விவகாரம் குறித்தும் அமைச்சர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 2.0 movie censored with U/A

இந்நிலையில் ’சர்கார்’படத்துக்கு துவக்கத்தில் கெடுபிடி காட்டி பின்னர் தளர்த்தியது போலில்லாமல், ‘’2.0’ படத்துக்கு எக்ஸ்ட்ரா அதிகாலைக் காட்சிகள், மற்றும் தியேட்டர்களிலேயே வைத்து விற்கப்படும் அதிக விலைகளுக்கு ஆப்பு வைப்பதில் உறுதியாக உள்ளதாம் அதிமுக அரசு. இதையொட்டி படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர் தரும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ரஜினி திண்டாடவேண்டும். அரசியல் ஆசையைக் கைவிடவேண்டும் என்று கணக்குப்போடுகிறார்களாம் அமைச்சர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios