பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகியோர் கைகோர்த்த இந்திய சினிமா உலகம் இதுவரை கண்டிராத ரூ. 543 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 நேற்று உலகம் முழுவதும் 10,000
தியேட்டரில்  வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே, விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமம் என ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியுள்ளது. 

ஹாலிவுட் சிட்டியான அமெரிக்காவிலும் 2.0 வெளியாகியுள்ளது. இப்படம் 224 பகுதிகளில் ரிலீஸ் ஆனது. படத்தின் உள்ளூர் வசூலை பார்த்து விட்டோம். அமெரிக்காவில் அதன் வசூல் எவ்வளவு தெரியுமா? அமெரிக்காவில் மொத்தம் 224 பகுதிகளில இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. 

அங்குள்ள இந்தியர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். முதல் நாள் வசூல்படி மாலை 5 மணி வரை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 451 டாலர் வசூல் செய்துள்ளது. இரவு 10 மணி வரை ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் நியூசிலாந்தில் ரூ. 11.11 லட்சமும், ஆஸ்திரேலியாவில் ரூ. 58.46 லட்சமும் வசூல் செய்துள்ளது.