இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நான்கு ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் 2 . ௦. பல முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு கூட, கிராபிக் பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தின் வெளீயீடு தள்ளிக்கொண்டே போனது.

ரஜினி ரசிகர்கள் மற்றும் இன்றி, இந்த பிரமாண்ட படத்தை பார்க்க பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும்  சுமார் 
10 ,000 திரையரங்குகளில் மிக  பிரமாண்டமாக வெளியானது. 

இந்நிலையில் வெளிநாடுகளில் மட்டும் 2 .0  செய்த வசூல் தொகை எவ்வளவு என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவில், 2 .65 கோடி ரூபாயும், நியூசிலாந்தில் 11 .11 லட்சமும், ஆஸ்திரேலியாவில் 58  லட்சமும் வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் சமூக ஆர்வலைகளிடமும் நல்ல கருத்தோடு எடுக்கப்பட்ட திரைப்படம் என்று பலரால் பாராட்ட பட்டு வருவதாலும் விடுமுறை நாட்களில் நல்ல வசூல் வேட்டை இருக்கும் என கூறப்படுகிறது.