நாடி நரம்பெல்லாம் ரேஸ் வெறியேறி உடம்பெல்லாம் பல தையல்களை போட்டு தப்பித்து கார் பைக் ரேஸில் கலந்து கொள்ளாமல் அமைதி வாழ்க்கைக்கு திரும்பிய அஜித் மீண்டும்,ரேஸிங் செய்ய சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கும் 'வலிமை' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அஜித் நடிக்கும் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே நிஜத்தில் பைக், கார் ரேஸில் கலந்து கொண்ட அஜித்துக்கு 18 மேஜர் ஆபரேஷன்களும், அதைவிட மைனர் ஆபரேஷன்கள் அதிகமாகவும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவ்வப்போது பில்லா, மங்காத்தா உள்ளிட்ட சில படங்களில் தனது நிஜ ஆசையை சினிமாவில் வெளிப்படுத்தி வந்தார். இப்போது ரேஸ் மூலம் மீண்டும் வலிமை காட்ட கிளம்பியுள்ளார் அஜித்.