பிரபல பாடகியும் இளம் நடிகையுமான மியா-லெசியா நெய்லர் என்பவர் 16 வயதிலேயே,  இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இறப்புக்கான காரணம் தெரியப்படுத்தவில்லை.

கடந்த ஏப்ரல் 7 ம் தேதி அவர் கீழே விழுந்ததாகவும், அதே நாளில் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல், 10 நாட்களுக்கு மேலாகி 17 ஆம் தேதி தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

Our thoughts are with Mya-Lecia’s family, friends and everyone that loved her at this very sad time. RIP Mya-Lecia ❤️⁣ ⁣ Message from CBBC:⁣ ⁣ MYA-LECIA ⁣NAYLOR We are so sorry to have to tell you that Mya-Lecia, who you will know from “Millie Inbetween” and “Almost Never”, has very sadly died.  Mya-Lecia was a much loved part of the BBC Children’s family, and a hugely talented actress, singer and dancer.  We will miss her enormously and we are sure that you will want to join us in sending all our love to her family and friends. ⁣ ⁣ We know this news is very upsetting, and it may help to share how you are feeling with friends or a trusted adult. If you are struggling and there is no one you feel you can talk to about it, you can call @Childline_official on 0800 11 11.⁣ ⁣ You can also find an online condolence book on the CBBC website.

A post shared by Almost Never (@almostnevershow) on Apr 17, 2019 at 8:01am PDT

இந்த செய்தி, இவரின் இளம் ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  மியா-லெசியா நெய்லர் ஒரு நடிகையாக தனது  வாழ்க்கையைத் தொடங்கி இருந்தாலும், திறமையான பாடகி என பல நிகழ்ச்சிகளில் நிரூபித்துள்ளார்.   'மில்லி இன் பிட்னிவ்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ்பெற்றார். 

மேலும் 2012 ஆம் ஆண்டு,  வெற்றி பெற்ற 'கிளவுட் அட்லஸில்' 'டாம் ஹாங்க்ஸ் ' மற்றும் 'ஹாலே பெர்ரி' ஆகியவற்றில்  மியா-லெசியா நெய்லர் நடித்துள்ளார். ஏப்ரல் 17 அன்று இந்த சோக செய்தி அறிவிக்கப்பட்டது முதல் அவரது இரு பிரபலமான நிகழ்ச்சிகளிலிருந்தும் அவரது உடைமையாளர்கள் சமூக ஊடகங்களில் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.