இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுவன், ரஜினி படத்தை பார்த்ததால் விரைவில் குணமடைந்துள்ள சம்பவம் மருத்துவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த 13 வயது சிறுவன் குஷால் என்பவனுக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவனுக்கு மருத்துவர்கள் இதைய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

அதன்படி கடந்த 6 ஆம் தேதி, பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் குஷாலுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நான்கு மணி நேரம் நடைபெற்றது. 

குஷால் சிறுவன் என்பதால், வலி தெரியாமல் இருக்க... அவனுக்கு பிடித்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை போட்டு காண்பித்தார்களாம் அவருடைய பெற்றோர். மேலும் இதன் காரணமாக சிறுவனுக்கு சுத்தமாக வலியை மறந்து விரைவில் குணம் அடைந்தார். இதய அறுவை சிகிச்சை செய்த ஒரு சிறுவன் வலியை மறந்து, ஒரு மாதத்தில் குணம் பெற்ற சம்பவம் மருத்துவர்களையே ஆச்சரியமடைய வைத்துள்ளது.