ஷாருக், ஆமிர் கான்களுக்கு அடுத்தபடியாக இந்தித்திரையுலகின் சமீபத்திய ஆச்சரியம் ரன்வீர் சிங். தான் ஏற்கும் பாத்திரத்துக்கு அவ்வளவு மெனக்கெடும் ரன்வீர் தற்போது நடித்து ‘83 படத்துக்காக அப்படியே அச்சு அசல் கபில்தேவாகவே மாறியிருக்கிறார்.

‘பத்மாவத்’, ‘கல்லி பாய்’, ‘பாஜிராவ் மஸ்தானி’ மற்றும் ‘ராம் லீலா’ போன்ற வெற்றி படங்களைத் தந்தவர் ரன்வீர்சிங். இவர் சமீபத்திய காலங்களில் மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது தோற்றங்கள் மற்றும் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்கு அமைந்திருக்கும். இவரது கதாபாத்திரம் இவர் நடித்த மற்ற படங்களை விட மாறுபட்டவையாக அமைந்திருக்கும், ஆகையால் தான் இவரால் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தர முடிந்தது.

இப்போது அவர் நடிப்பில் தயாராகும் 83′ படத்தில் ரன்வீரின் தோற்றம் ஒரு கிரிக்கெட் வீரர், அவர் அதற்கேற்ப தன்னை உருவகப்படுத்தியுள்ளார்.அந்தப் படத்தில் இவர் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரும் 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவருமான கபில் தேவ் ஆக நடிக்கிறார். நேற்று வெளியான ஒரு படத்தில், ரன்வீர் சரியாக கபிலைப் போலவே காட்சி அளிக்கிறார், இந்தப் படம் நிச்சயமாக அதீத வரவேற்பைப் பெரும். அவரது முதல் தோற்றம் நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும்.

ரன்வீர் நடிக்கும் இந்தப் படத்தை கபீர் கான் இயக்குகிறார். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை விஷ்ணு வர்தன் இந்துரி, சஜித் நதியட்வாலா மற்றும் மது மன்டெனா தயாரிக்கின்றனர். இவர்கள் வரிசையில் தீபிகா படுகோனேவும் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஏப்ரல் 10, 2020 அன்று வெளியிடப்பட உள்ள இப்படத்திம் முக்கிய க்ளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு தற்போது உலகக்கோப்பை போட்டிகள் நடந்துவரும் மைதானத்தில் படமாக்கப்படவிருக்கிறது.