Asianet News TamilAsianet News Tamil

க்ரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? இதை மட்டும் தெரிஞ்சுகோங்க...!

தமிழ் நாடு அரசு தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்படும் க்ரூப் 4 தேர்வுக்கான சில கேள்வி மற்றும் பதில்களை தொடர்ந்து பார்ப்போம்.

easy questions for tnpsc gorup 4 exam preperation
Author
Chennai, First Published Jul 12, 2022, 11:22 AM IST

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 382 பணி இடங்களுக்கு ஆட்களை நிரப்புவதற்காக க்ரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. TNPSC க்ரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி உடன் நிறைவு பெற்று விட்டது. இந்த நிலையில், க்ரூப் 4 தேர்வு எழுத சுமார் 21 லட்சத்து 85 ஆயிபத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். 

மேலும் படிக்க: பத்தாவது முடித்துள்ளீர்களா? இந்த மத்திய அரசு வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.. முழு விவரங்கள்..!

TNPSC க்ரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களில் நீங்கள் ஒருவர் எனில், இது உங்களுக்கு பயனுள்ள தொகுப்பாக இருக்கும். இந்த தொகுப்பில் க்ரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேல்விகளில் சில முக்கியமான கேள்வி பதில்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறோம். கேள்விகளுடன் அவற்றுக்கான பதில்களும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர போறீங்களா..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விபரம்..

TNPSC க்ரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் சில....

1 - கர்மநாசா நதிநீர் சர்ச்சை எந்த மாநிலங்களுக்கு இடையில் உள்ளது?

(A) பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான்
(B) ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா
(C) பீகார் மற்றும் உத்திரபிரதேசம்
(D) அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர்
(E) விடை தெரியவில்லை

விடை: (C)

2. அச்சுதநாயர் காலத்தில் விஜயநகர பேரரசு எத்தனை ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?


(A) 15 ராஜ்ஜியங்கள்
(B) 16 ராஜ்ஜியங்கள்
(C) 17 ராஜ்ஜியங்கள்
(D) 18 ராஜ்ஜியங்கள்
(E) விடை தெரியவில்லை

விடை: (C)

மேலும் படிக்க:கவனத்திற்கு !! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..

3. பானிபட் போரில் பாபரின் இராணுவத்தில் இருந்த தலைசிறந்த துப்பாக்கி வீரர் (A) உஸ்தாத் அலி

(B) ஜாஃபர்கான்
(C) ஹூமாயூன்
(D) ஹிண்டால்
(E) விடை தெரியவில்லை

விடை: (A)

4. சிவந்த மண் கற்களால் கட்டப்பட்ட 'லால் கிலா' எனப்படும் கோட்டையைக் கட்டியவர்?


(A) ஜஹாங்கீர்
(B) ஷாஜஹான்
(C) அக்பர்
(D) அவுரங்கசீப்
(E) விடை தெரியவில்லை

விடை: (B)

5. விஜய நகரம் எந்த பெயரில் அழைக்கப்பட்டது?

1. பீஜநகர்
2. விருபாட்ஷபுரம்
3. ஹோஸ்பட்டணம்
4. வித்யாநகரம்

(A) 1 மட்டும்
(B) 2 மட்டும்
(C) 2, 3 மட்டும்
(D) 1, 2, 3, 4
(E) விடை தெரியவில்லை

விடை: (D)

6. கீழ்வருபவற்றுள் அரசரின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை முன்வைத்த முதல் அரசர் யார்?

(A) அலாவுதீன் கில்ஜி
(B) பால்பன்
(C) இல்ட்டுமிஷ்
(D) இரஷியா
(E) விடை தெரியவில்லை

விடை: (B)

7. ஹரப்பன் மக்களால் பயிரிடப்படாத பயிர் எது?

(A) பார்லி
(B) கோதுமை
(C) பஞ்சு
(D) கரும்பு
(E) விடை தெரியவில்லை

விடை: (D)

8. சபாநாயகரால் பாராளுமன்ற அமர்வினை முடிவுக்கு கொண்டு வருதல் ___ ஆகும்.

(A) கலைப்பு
(B) ஒத்திவைப்பு
(C) முடிவுக்கு கொண்டு வருதல்
(D) அழைப்பு
(E) விடை தெரியவில்லை

விடை: (C)

9. தடுப்புக்காவலர் சட்டத்தின்படி மூன்று மாத காலத்திற்கு பிறகு செயல்படுத்த அனுமதிப்பவர் யார்?

(A) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
(B) இந்திய தலைமை வழக்குரைஞர்
(C) தலைமை வழக்கறிஞர்
(D) ஆலோசனைக்குழு
(E) விடை தெரியவில்லை

விடை: (D)

10. கீழ்காணப்படும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளில், உச்சநீதிமன்றத்தை குறிப்பவை யாவை?

(A) விதி 36 முதல் 51 வரை
(B) விதி 79 முதல் 123 வரை
(C) விதி 124 முதல் 147 வரை
(D) விதி 12 முதல் 35 வரை
(E) விடை தெரியவில்லை

விடை: (C)

Follow Us:
Download App:
  • android
  • ios