பத்தாவது முடித்துள்ளீர்களா? இந்த மத்திய அரசு வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.. முழு விவரங்கள்..!

பவர் க்ரிட் கார்ப்பரேஷன் ஆஃப்  இந்தியா நிறுவனத்தில் காலி இடங்கை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

central govt power grid corporation job notification 10th iti engineering candidates

பவர் க்ரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரேட் அப்ரண்டைஸ் (Trade Apprentice) வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியில் சேர்வதற்கான தகுதி, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பவர் க்ரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்க முடியும். 

மேலும் படிக்க: க்ரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? இதை மட்டும் தெரிஞ்சுகோங்க...!

இதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். விண்ணப்பங்களை பவர் க்ரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளமான https://www.powergridindia.com சென்று சமர்பிக்க முடியும். இத பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

நிறுவனத்தின் பெயர் - பவர் க்ரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
அதிகாரப்பூர்வ வலைதளம் - https://www.powergridindia.com
வேலைவாய்ப்பு வகை - மத்திய அரசு
வேலை பிரிவு - எலெக்ட்ரிக்கல்

மேலும் படிக்க: மாணவர்களே அலர்ட் !! எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர போறீங்களா..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விபரம்..

central govt power grid corporation job notification 10th iti engineering candidates

பதவி - டிரேட் அப்ரண்டைஸ் (trade apprentice)
காலி இடங்கள் - 1151
கல்வித் தகுதி - 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, எல்எல்பி, பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்.டபிள்யூ., பி.ஜி.டி.பி.எம்.
சம்பளம் - மாதம் ரூ. 11 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம்
வயது வரம்பு - 18 
பணி இடம் - இந்தியா முழுக்க
தேர்வு செய்யப்படும் முறை - மெரிட் மற்றும் நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

மேலும் படிக்க:கவனத்திற்கு !! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..

விண்ணப்பிக்கும் முறை:

பவர் க்ரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறையை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

- பவர் க்ரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைதளம் https://www.powergridindia.com செல்லவும்

- வலைதளத்தில் PGCIL Jobs 2022 பற்றிய முழு விவரங்களை கவனமாக படிக்க வேண்டும்

- PGCIL Jobs Application Form 2022 விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அதனை முழுமையாக நிரப்ப வேண்டும்

- இனி அதில் கேட்கப்படும் ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்

- பவர் க்ரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்ள சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்

- தேவைப்படும் பட்சத்தில் PGCIL Vacancy 2022 விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்

- அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பின் அவற்றை சரிபார்த்து விட்டு, விண்ணப்பத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios