ரூ.7300 கோடி நிறுவனத்தை வைத்திருக்கும் இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்! அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
கைவல்யா வோஹ்ரா மற்றும் அவரின் நண்பர் ஆதித் பாலிச்சா இருவரும் சேர்ந்து மும்பையில் கடந்த 2021-ம் ஆண்டு Zepto என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
Zepto நிறுவனத்தின் இணை நிறுவனரான கைவல்யா வோஹ்ரா, IIFL Wealth Hurun India Rich List 2022 பட்டியலில் இடம்பெற்ற இளம் பணக்கார இந்தியர் ஆவார். கைவல்யா வோஹ்ரா மற்றும் அவரின் நண்பர் ஆதித் பாலிச்சா இருவரும் சேர்ந்து மும்பையில் கடந்த 2021-ம் ஆண்டு Zepto என்ற நிறுவனத்தை தொடங்கினர். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக கைவல்யாவும், ஆதித் பாலிச்சா தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். ஆன்லைன் மூலம் மளிகைப் பொருட்களை இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்போது இந்தியாவின் மிக வேகமாக வளரும் இ-மளிகை நிறுவனமாக மாறியுள்ளது.
2022-ல் இந்தியாவின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் 2022 இல் கைவல்யா வோஹ்ரா 1,036 வது இடத்தில் இருந்தார், அவரின் நிகர மதிப்பு ரூ 1,000 கோடி. மறுபுறம், இந்த பட்டியலில் கைவல்யா வோஹ்ராவை விட ஆதித் பலிச்சா சற்றே முன்னிலையில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடியாகும்.
2022-ம் ஆண்டு YC கன்டினியூட்டி ஃபண்ட் என்ற நிறுவனம் 200 மில்லியன் டாலரை Zepto நிறுவனத்தில் முதலீடு செய்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2022 900 மில்லியன் டாலராக உயர்ந்தது. அதற்கு முன்பு 2021, டிசம்பரி, Zepto நிறுவனத்தின் சந்தை மதிப்பு 570 மில்லியன் டாலராக இருந்தது.
ரூ. 775 கோடி சொத்து இருக்கு.. ஆனா 24 வருடங்களாக ஒரு புதிய புடவை கூட வாங்காத பெண்மணி.. ஏன்?
யார் இந்த கைவல்யா வோஹ்ரா?
கர்நாடக மாநிலத்தில் 2003-ம் மார்ச் 15-ம் தேதி பிறந்தார் கைவல்யா வோஹ்ரா. பெங்களூருவில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். கைவல்யா வோஹ்ராவுக்கு இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மூன்று மொழிகள் தெரியும். Zeptoவைத் தொடங்குவதற்கு முன், கைவல்யா வோஹ்ரா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பில் சேர அட்மிஷன் கிடைத்தது. கைவல்யா வோஹ்ரா கணினி அறிவியல் பொறியியல் படிப்பைத் தொடர ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இருப்பினும், கைவல்யாவும் அவரது வகுப்புத் தோழரான ஆதித் பாலிச்சா ஆகியோர் தங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அப்போதுதான் அவர்கள் தங்கள் இ-மளிகை நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினர்.
கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா ஆகியோர் ஸ்டான்போர்டில் சேர்ந்தபோது துபாயில் வசித்து வந்தனர், ஆனால் இருவரும் ஆன்லைன் புரோகிராம் ஒன்றில் கலந்துகொண்ட பிறகு மும்பைக்குத் திரும்ப முடிவு செய்தனர்.
கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் ஆகியோர் இணைந்து Kiranakart என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினர். மும்பை முழுவதும் 45 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை வழங்குவதாக உறுதியளித்தனர். பின்னர், அவர்கள் Kiranakart Technologies Private Limited நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Zepto-ஐ இணைந்து நிறுவினர். அந்நிறுவனம் இப்போது டெல்லி, சென்னை, குர்கான், பெங்களூரு மற்றும் மும்பையில் டெலிவரி செய்கிறது.
கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் ஆகியோர் ஃபோர்ப்ஸ் இதழின் செல்வாக்குமிக்க '30 அண்டர் 30' இ-காமர்ஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- aadit palicha and kaivalya vohra
- kaivalya vohra
- kaivalya vohra biography
- kaivalya vohra forbes
- kaivalya vohra net worth
- kaivalya vohra zepto
- kaivalya vohra zepto sotry
- who is kaivalya vohra
- zepto
- zepto business model
- zepto co founder
- zepto founder
- zepto founder forbes
- zepto founder interview
- zepto founder kaivalya vohra
- zepto founders
- zepto kaivalya vohra
- zepto kaivalya vohra and aadit palicha
- zepto net worth
- zepto net worth 2023
- zepto startup