ரூ. 775 கோடி சொத்து இருக்கு.. ஆனா 24 வருடங்களாக ஒரு புதிய புடவை கூட வாங்காத பெண்மணி.. ஏன்?

சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி என்பதும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Sudha Murthy net worth :A woman who has assets of Rs.775 crores.. has not bought a new saree for 24 years.. Why Rya

இன்றைய உலகில், பொருட்களை வாங்கி குவிப்பது என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், அதே சமயம் எளிமையைப் பேணுவது ஒரு கலையாக மாறிவிட்டது. எளிமையைப் பற்றி நாம் பேசும்போது, ​​உடனடியாக நம் நினைவுக்கு வரும் ஒரு பெயர் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி. சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி என்பதும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கவர்ச்சி மற்றும் ஆடம்பரத்தால் மூடி மறைக்கப்பட்ட உலகில்,  வெற்றியின் உண்மையான சாராம்சம் புகழ் அல்லது அதிர்ஷ்டத்தில் இல்லை, ஆனால் ஒரு நபரின் தன்மையை வடிவமைக்கும் மதிப்புகளில் உள்ளது என்று சுதா மூர்த்தியின் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது.

ஆகஸ்ட் 19, 1950 இல் பிறந்த சுதா மூர்த்தி ஒரு கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் ஆவார். 2006 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது, மேலும் 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷண் அவருக்கு வழங்கப்பட்டது. சுதா மூர்த்தியின் நிகர மதிப்பு சுமார் ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர் ஆண்டுக்கு ரூ.300 கோடி சம்பாதிப்பதாக கூறப்படுகிறது,

ஆனால் மற்ற பணக்காரர்களைப் போலல்லாமல், சுதா மூர்த்தி மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புகிறார். கடந்த 24 ஆண்டுகளில் ஒரே ஒரு புதிய புடவை கூட அவர் வாங்கவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆம். சராசரி சம்பளம் வாங்கும் பெண்களே வாரத்திற்கு ஒரு புடவை என வாங்கிக்குவித்து வரும் நிலையில், இத்தனை கோடி சொத்துக்களை கொண்ட 24 ஆண்டுகளில் ஒரு புதிய புடவை கூட வாங்கவில்லை என்பது ஆச்சர்யமான விஷயம் தான். 

ரூ. 6912 கோடி சொத்து வைத்திருக்கும் இந்திய தொழிலதிபரின் மகள்.. அவரின் கணவர் இந்த நாட்டின் பிரதமர்!

“நான் புனித நீராடுவதற்காக காசியில் இருந்தேன், நீங்கள் காசிக்குச் செல்லும்போது நீங்கள் மிகவும் ரசிக்கும் ஒன்றை விட்டுவிட வேண்டும். அதிலிருந்து ஷாப்பிங், குறிப்பாக புடவைகளை வாங்குவதை கைவிட்டுவிட்டேன். நான் இப்போது அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்குகிறேன், ”என்று சுதா மூர்த்தி ஒருமுறை ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தனது கணவர் நாராயண மூர்த்தியும் தனது கருத்தை ஏற்றுக்கொண்டதாகவு, அவரும் எளிமையான ரசனையுள்ள மனிதர் என்றும் சுதா மூர்த்தி கூறியிருந்தார். இருப்பினும் சுதாவும் நாராயண மூர்த்தியும் கணிசமான அளவு பணத்தை புத்தகங்களுக்காக செலவிடுகிறார்கள். இந்த ஜோடி 20,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios