வங்கிக் கணக்கு பேலன்ஸ் தொடர்பாக தற்போது ஒரு புதிய வைரலாகி வருகிறது. 

வங்கிச் செயல்பாடுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. எனினும் வங்கிக் கணக்கு தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த நிலையில் வங்கிக் கணக்கு பேலன்ஸ் தொடர்பாக தற்போது ஒரு புதிய வைரலாகி வருகிறது. அந்த செய்தியில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வாடிக்கையாளர்களின் வங்கி பேலன்ஸ் தொடர்பான புதிய விதிகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கணக்கில் 30,000 ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் வைத்திருந்தால், உங்கள் கணக்கு மூடப்படும் என்று சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த செய்தி போலியானது என்று பத்திரிகை தகவல் பணியகமான PIB, வங்கி பேலன்ஸ் தொடர்பாக வைரலாகி வரும் தகவல் போலியானது என்று கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை என்று PIB தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…

PIB தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ வங்கிக் கணக்குகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று ஒரு செய்தியில் கூறப்பட்டு வருகிறது. எந்த ஒரு கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் 30,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அவருடைய கணக்கு முடக்கப்படும். இந்த செய்தி போலியானது. ரிசர்வ் வங்கி அத்தகைய முடிவை எடுக்கவில்லைஎன்று குறிப்பிட்டுள்ளது.

PIB மூலம் செய்திகளை உண்மைச் சரிபார்ப்பது எப்படி?

இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும். அதே போல் +918799711259 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலும் https://pib.gov.in என்ற இணையதளத்திலும் கிடைக்கிறது.

நேரு நினைவு அருங்காட்சியம் நூலகம் பெயர் மாற்றம்; மோதலில் பாஜக, காங்கிரஸ்; நடந்தது என்ன?