ரூ. 9,143 கோடி சொத்து! Forbes பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்.! யார் இந்த கே.பி ராமசாமி?
பிரபல தொழிலதிபரும் கேபிஆர் மில் நிறுவனர் மற்றும் தலைவருமான கே.பி.ராமசாமி, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக நுழைந்துள்ளார்.
பணக்கார இந்தியர்கள் பட்டியலை கடந்த வியாழக்கிழமை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்தார். கௌதம் அதானி இரண்டாவது இடத்திலும், ஷிவ் நாடார் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆனால் இந்த பட்டியலில் புதிதாக தமிழர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். பிரபல தொழிலதிபரும் கேபிஆர் மில் நிறுவனர் மற்றும் தலைவருமான கே.பி.ராமசாமி, பட்டியலில் புதிதாக நுழைந்துள்ளார். தற்போது $2.3 பில்லியன் சொத்து மதிப்புடன் தற்போது 100வது இடத்தில் உள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ₹9,143 கோடியாகும்
யார் இந்த கே.பி.ராமசாமி?
ஈரோடு மாவட்டம், கல்லியம்புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கே.பி. ராமசாமி. கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய அவர், இந்தியாவின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி வணிகம் ஒன்றை நிறுவி அதில் வெற்றி கண்டுள்ளார். 1984 இல், KPR மில் நிறுவப்பட்டது. பின்னர் கே.பி. ராமசாமி தனது நிறுவனத்தை விரிவுபடுத்தினார். 2013-ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்கினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி செய்வதோடு கூடுதலாக, KPR மில் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பின்னப்பட்ட ஆடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றது. கோயம்புத்தூரில் அமைந்துள்ள கேபிஆர் மில், ராமசாமி மற்றும் அவரது 2 சகோதரர்களுக்கு சொந்தமானது. இதில் 30,000 பணியாளர்கள் உள்ளனர் அவர்களில் 90% பெண்கள் என்பது தான் கூடுதல் சிறப்பு.
Forbes வலைத்தளத்தின்படி, KPR மில் ஒவ்வொரு ஆண்டும் 128 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்கிறது, விளையாட்டு உடைகள் முதல் நைட் டிரஸ் வரை எண்ணற்ற ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் இந்த H&M, Marks & Spencer மற்றும் Walmart போன்ற கடைகளில் விற்கப்படுகின்றன. மேலும் கேபிஆர் குழுமம், 2019ல் ஆண்களுக்கான இன்னர்வேர் பிராண்டான ஃபாசோவை விற்பனை செய்யத் தொடங்கியது.
நிறுவனத்தின் இணையதளத்தின்படி, கே.பி.ராமசாமி தனது கல்வி நிறுவனமான ‘கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி’ மூலம் கல்வியை வழங்கும் ‘கேபிஆர் அறக்கட்டளை’ என்ற பொது அறக்கட்டளையை நிறுவினார். ராமசாமி தமிழ்நாட்டில் பல காற்றாலைகளை நிறுவியதாகவும், கர்நாடகாவில் பசுமை மின்சாரத்தை வழங்குவதற்காக சர்க்கரை ஆலையை நிறுவியதாகவும் அவரின் நிறுனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .