Asianet News TamilAsianet News Tamil

மத்திய பட்ஜெட் 2023 : மொபைல், டிவி விலை குறைகிறது... தங்கம், சிகரெட் விலை உயர்கிறது - முழு விவரம் இதோ

செல்போன், கேமரா லென்ஸ், டிவி, லித்தியம் பேட்டரி போன்றவற்றுக்கான சுங்க வரி விலக்கு மேலும் ஒரு வருடத்திற்கு தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

UNION BUDGET 2023 Mobiles TVs to get cheaper and Gold, silver, cigarettes to get costlier
Author
First Published Feb 1, 2023, 1:20 PM IST

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது எந்தெந்த பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும், எதற்கான வரி விகிதம் அதிகரிக்கப்படும் என்கிற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

* அதன்படி செல்போன், கேமரா லென்ஸ், டிவி, லித்தியம் பேட்டரி போன்றவற்றுக்கான சுங்க வரி விலக்கு மேலும் ஒரு வருடத்திற்கு தொடரும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

* அதேபோல் தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள் போன்றவற்றின் விலை உயர்த்தப்படும் என்பதையும் பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

* இதுதவிர சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்படும் என அவர் அறிவித்தார்.

இதையும் படியுங்கள்...ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

* சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் குறைக்கப்படும் என்பதையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

* ஜவுளி மற்றும் விவசாயம் தவிர பிற பொருட்களின் அடிப்படை சுங்க வரி விகிதங்களின் எண்ணிக்கையை 21 முதல் 13 ஆக குறைக்கப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

* இதனால், பொம்மைகள், சைக்கிள்கள் மற்றும் ஆட்டோமொபைல் சாதணங்களின் அடிப்படை சுங்க வரிகள் குறைக்கப்பட்டு, அதன் விலையிலும் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதையும் படியுங்கள்... Income Tax Budget 2023:பட்ஜெட் 2023: வருமானவரி உச்சவரம்பு விலக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சமாக உயர்வு: முழுவிவரம்

Follow Us:
Download App:
  • android
  • ios