மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி மூலதன ஒதுக்கீடு செய்துள்ளார்.
2013-14 நிதியாண்டில் செய்யப்பட்ட செலவீனத்தை விட, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஒன்பது மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 வரை, ரயில்வேயின் மூலதனச் செலவு ஆண்டுக்கு 45,980 கோடியாக இருந்தது. தற்போது நாடு முழுவதும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில், திட்ட முதலீடு அதிகரிக்கும் மற்றும் ரயில்வே கட்டமைப்பு தேசிய வளர்ச்சியின் கருவியாக வெளிப்படும்.
நரேந்திர மோடி 2.0 அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இதைக் கருத்தில் கொண்டு, 2023-24 பட்ஜெட் அறிவிப்பு, ரயில்வே போன்ற நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினருக்கு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ரயில் பயணிகள் டிக்கெட் அல்லது சரக்குக் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் சிறந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
பட்ஜெட் மதிப்பீடுகள், ஆண்டு அறிக்கைகள், வருவாய் மற்றும் இந்திய ரயில்வேக்கான ஒதுக்கீடுகள் பற்றிய விரிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வழங்கினார். ரயில்வே பட்ஜெட் 2023 மேக் இன் இந்தியா முயற்சியை ஊக்குவிக்கும் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் 2022-23ல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.1,37,000 கோடி மூலதனச் செலவீனமாக ஒதுக்கீடு செய்தார். மோடி அரசாங்கத்தின் லட்சியமான ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் 2,000 கிலோமீட்டர்கள் கவாச் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்த அறிவிப்பு 2022-23ல் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக வெளியிடப்பட்டது.
