4 கி.மீக்கு ரூ.4,300 கட்டணம் செலுத்திய Uber பயனர்.. ஷாக்கான CEO என்ன சொன்னார் தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் இந்த அதிகப்படியான கட்டணக் கட்டணங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.

Uber user who paid Rs 4,300 for 4 km.. Do you know what the CEO of said?

ஓலா, ஊபெர் போன்ற நிறுவனங்கள் குறுகிய தூர பயணத்திற்கு கூட அதிக கட்டணம் வசூலிப்பதாக அவ்வப்போது விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் இந்த அதிகப்படியான கட்டணக் கட்டணங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில், ஊபெர் பயனர் ஒருவர் நியூயார்க்கின் மன்ஹாட்டன் வழியாக 4 கிமீ பயணத்திற்கு கிட்டத்தட்ட $52, அதாவது சுமார் ரூ. 4,294 செலுத்தியதாக தெரிவித்துள்ளார். 

Uber CEO தாரா கோஸ்ரோஷாஹியிடம் இந்த குற்றச்சாட்டு நேரடியாக முன்வைக்கப்பட்டது. Wired என்ற டிஜிட்டல் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டீவன் லெவி, சமீபத்தில் Uber CEO-வை நேர்காணல் செய்தார். அப்போது தனது நியூயார்க் நகர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெஸ்ட் சைட் வசதி வரையிலான 4 கி.மீ குறுகிய பயணத்திற்கான கட்டணத்தை யூகிக்குமாறு Uber CEO தாரா கோஸ்ரோஷாஹியிடம் கோரினார். அதற்கு 20 டாலர் இருக்கலாம் என்று Uber CEO தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்டீவன் லெவி காட்டிய கட்டண ரசீதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். 20 டாலர் இருக்கும் தான் ஊகித்ததை விட இரண்டு மடங்கு கட்டணம் இருந்ததே அதற்கு காரணம்.

ஆனால் இந்த கூடுதல் விலையை நியாயப்படுத்தும் வகையில், பொருளாதாரம் பணவீக்கத்துடன் சிக்கித் தவிப்பதால், கட்டணம் உபெரின் கையில் இல்லை என்று கோஸ்ரோஷாஹி தெரிவித்தார். மேலும். 'எல்லாமே விலை உயர்ந்துள்ளது. எனவே ஊபெர் கட்டண விலை உயர்வுக்கு, பணவீக்கம் மற்றும் அதிகரித்த நேரம் மற்றும் உழைப்புச் செலவுகள் ஆகியவை காரணம்.” என்று தெரிவித்தார்.

இதனிடையே 2018 முதல் 2022 வரையிலான பணவீக்க விகிதத்தை அமெரிக்காவில் Uber விலை விட 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று Forbes அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 83 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளன. அமெரிக்க சந்தையில் விலை ஏற்றம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், இந்தியாவிலும் ஊபெர் பயனர்கள் அதிக கட்டணத்தை எதிர்கொள்கின்றனர். மழை நாட்கள் அல்லது பண்டிகை சந்தர்ப்பங்கள் இல்லாமல் கூட கேப் கட்டணங்கள் அதிகமாக உள்ளது என்று பலரும் தெரிவிக்கின்றனர். பல பயனர்கள் அதிக விலை கொடுத்து பயணம் செய்வதாக குற்றம்சாட்டி உள்ளனர். உதாரணமாக, மெட்ரோ நகரங்களில் 5-6 கிலோமீட்டர்களுக்கான குறுகிய பயணக் கட்டணம் ரூ.300 ஆக உள்ளது.

இது ஊபெரின் விலை வெளிப்படைத்தன்மை பற்றிய சந்தேகங்களை மேலும் எழுப்பியுள்ளது. பல Uber பயனர்கள் மற்றும் ஆய்வாளர்கள் விலைவாசி உயர்வின் விளைவாக உண்மையில் பணவீக்கத்தின் விளைவாக உள்ளதா அல்லது நிறுவனம் வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்களை சரிசெய்கிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சுவாரஸ்யமாக, பணவீக்கம் மற்றும் விலை சர்ச்சையின் எழுச்சிக்கு மத்தியில், ஊபெர் நிறுவனம் ஜூன் 30 இல் முடிவடைந்த மூன்று மாத காலப்பகுதியில் அதன் இரண்டாம் காலாண்டு செயல்திறனில் $394 மில்லியன் லாபம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்தின் மதிப்பு 6 லட்சம் கோடி! யார் அந்த தம்பதி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios