உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்தின் மதிப்பு 6 லட்சம் கோடி! யார் அந்த தம்பதி?
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது மனைவிக்கு வழங்கும் ஜீவனாம்சத் தொகையை பற்றி அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.
உலகின் பணக்கார தம்பதியான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு தங்கள் பிரிவை அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களின் விவாகரத்து அறிவிக்கப்பட்டபோது, உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வழங்கும் ஜீவனாம்சத் தொகையை பற்றி அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸின் விவாகரத்தில் சரியான ஜீவனாம்ச தொகை ஊடகங்களில் வெளியிடப்படவில்லை என்றாலும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனது முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸுக்கு கணிசமான தொகையை செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பில் கேட்ஸ் 73 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 6 லட்சம் கோடியை மெலிண்டா கேட்ஸுக்கு கொடுத்தார். இதனால் மெலிண்டா உலகின் பணக்கார பெண்களில் ஒருவராக மாறினார்.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் தங்களின் அறிவித்தபோது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து மே 3, 2021 அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில் “ எங்கள் உறவில் மிகுந்த சிந்தனை மற்றும் பல முயற்சிகளுக்குப் பிறகு, எங்கள் திருமணத்தை முடிக்க முடிவு செய்துள்ளோம். கடந்த 27 ஆண்டுகளில், நாங்கள் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம், மேலும் அனைத்து மக்களும் ஆரோக்கியமான, பயனுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கு உலகெங்கிலும் செயல்படும் ஒரு அடித்தளத்தை உருவாக்கினோம். அந்த பணி மற்றும் அஸ்திவாரத்தில் எங்கள் பணியை ஒன்றாக தொடரும், ஆனால் எங்கள் வாழ்க்கையின் இந்த அடுத்த கட்டத்தில் நாம் ஜோடியாக ஒன்றாக வளர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. இந்த புதிய வாழ்க்கைக்கு நாங்கள் செல்லத் தொடங்கும் போது எங்கள் குடும்பத்திற்கான இடத்தையும் தனியுரிமையையும் நாங்கள் கேட்கிறோம். " என்று தெரிவித்தார்.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதிக்கு- ஜெனிபர் கேட்ஸ், ரோரி கேட்ஸ் மற்றும் ஃபோப் கேட்ஸ் என்ற 3 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.19,000 கோடி சொத்து! இந்தியாவின் 3வது பணக்கார பெண்.. அட நம்ம சென்னையை சேர்ந்தவங்க தான்..
- Bill Gates
- Bill Gates alimony
- Bill Gates divorce
- Bill Gates google news
- Bill Gates net worth
- Bill Gates news
- Google News
- Jennifer Gates
- Melinda Gates
- Melinda Gates google news
- Melinda Gates news
- Microsoft
- Phoebe Gates
- Rory Gates
- Trending news
- celebrity divorce
- expensive divorces
- most expensive divorce
- worlds most expensive divorce