twitter: elon musk: எலான் மஸ்க் என்ன செய்வார்? ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு வாங்கும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் ஒப்பந்தத்துக்கு, ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு வாங்கும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் ஒப்பந்தத்துக்கு, ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்ததைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு ட்விட்டர் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு: ஒரு லட்சம் பேருக்கு வேலை: ஃபாக்ஸ்கான்-வேதாந்தா ஒப்பந்தம்
ட்விட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்கிக்கொள்வதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அந்த ஒப்பந்தத்துக்கு ட்விட்டர் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பங்குதாரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் அளித்தனர்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்ததைத் தொடர்ந்து ட்விட்டர் பங்கு விலை அமெரிக்க பங்குச்சந்தையில் 41.8 டாலராகக் குறைந்திருந்தது. ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ட்விட்டர் பங்குதாரர்கள் வாக்களித்துள்ளார்கள் என்ற செய்தி வெளியானதும் பங்குவிலை உயரத் தொடங்கியது.
தினசரி ரூ.50 முதலீடு! கிடைப்பதோ ரூ.35 லட்சம்: அஞ்சலகத்தின் இந்த சேமிப்பு திட்டத்தை மறக்காதிங்க
இதற்கு முன் 6 சதவீதம் வரை சரிந்திருந்த ட்விட்டர் பங்கு விலை, வர்த்தகத்தின் முடிவில் 0.7% விலை உயர்ந்தது. எலான் மஸ்கிடம் ட்விட்டர் நிறுவனத்தை விற்பதற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் தேவைப்பட்டது. இப்போது பங்குதாரர்களும் ஒப்புதல் அளித்துவிட்டனர்.
ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த எலான் மஸ்க் திடீரென ஜூலை மாதத்தில் பின்வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கணக்கில் ஏராளமான போலிக்கணக்குகள் உள்ளன, அவற்றின் விவரங்களைத் தர வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் எலான் மஸ்க் கோரினார்.
கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி! 158 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை ஏன்?
ஆனால், ட்விட்டர் நிறுவனம் எந்த விவரங்களையும் தராததையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். எலான் மஸ்க் திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்ததை எதிர்த்து, டெலாவர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் வழக்கறிஞர்கள் போதுமான ஆவணங்களையும், ஆதாரங்களையும் 4 வாரங்களில் தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 17ம்தேதி டெலாவர் சான்செரி நீதிமன்றத்தில் விசாரமைக்கு வருகிறது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் எலான் மஸ்க் என்ன செய்யப்போகிறார், அவரின் அடுத்த செயல்பாடு எப்படி இருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது