Vedanta: குஜராத்தில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு: ஒரு லட்சம் பேருக்கு வேலை: ஃபாக்ஸ்கான்-வேதாந்தா ஒப்பந்தம்
இந்தியாவின் வேத்தாந்தா குழுமம், மின்னணு உற்பத்தி சாதனங்களைத் தயாரிக்கும் தைவான் நாட்டின் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து குஜராத்தில் 2ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் செமிகன்டக்டர் மற்றும் பிஸ்ப்ளே எப்ஏபி தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இந்தியாவின் வேத்தாந்தா குழுமம், மின்னணு உற்பத்தி சாதனங்களைத் தயாரிக்கும் தைவான் நாட்டின் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து குஜராத்தில் 2ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் செமிகன்டக்டர் மற்றும் பிஸ்ப்ளே எப்ஏபி தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேதாந்தா குழுமம், ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. மத்திய ரயில்வே, தகவல்தொடர்பு மற்றும் மின்னணு தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் முடிந்தது.
ஆகஸ்ட் சில்லறைப் பணவீக்கம் 7சதவீதமாக உயர்வு: வட்டி வீதத்தை உயர்த்த ஆர்பிஐக்கு நெருக்கடி
இரு நிறுவனங்களும் இணைந்து குஜராத்தில் ரூ.ஒருலட்சத்து 54 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளன. இந்த தொழிற்சாலை மூலம் ஒருலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று குஜராத் அரசு நம்புகிறது.
வேதாந்தா குழுமம் மற்றும் ஃபாக்ஸ்கான் இணைந்து அமைக்கும் தொழிற்சாலை, அகமதாபாத்தில் அமைக்க உள்ளது. இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக வேதாந்தா குழுமத்துக்கு முதலீட்டில் மானியம், மின்சாரத்தில் மானியம், முதலீட்டுச்ச செலவில் மானியம் நிதி மற்றும் நிதி அல்லாத வகையில்சலுகைகளை குஜராத் அரசு வழங்குகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி! 158 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை ஏன்?
இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக வேதாந்தா குழுமம் 1000 ஏக்கர் நிலத்தை குஜராத் அரசிடம் இருந்து கோருகிறது. இந்த நிலத்தை 99 ஆண்டுகளுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளவும் வேதாந்தா குழுமம் கோரியுள்ளதாகத் தகவல்கல் தெரிவிக்கின்றன. தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவை நிலையான விலையில் 20 ஆண்டுகளுக்கு வழங்கிடவும் வேதாந்தா குழுமம் கோரிக்கை வைத்துள்ளது.
தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிராவிலும் இதேபோன்ற செமிகன்டக்டர் தொழிற்சாலையை வேதாந்தா குழுமம் பேசி வந்தநிலையில் குஜராத்தில் அமைத்துள்ளது.
காரின் பின் சீட்டிலும் ‘சீட் பெல்ட் அலாரம்’ கொண்டுவரப்படும்: நிதின் கட்கரி தகவல்
இந்தியாவின் செமிகன்டக்டர் சந்தை மதிப்பு 2020ம் ஆண்டில் 1500 கோடி டாலராக இருந்தது, இது 2026ம் ஆண்டில் 6300 கோடியாக அதிகரிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிப் தொழிற்சாலை அமைக்க இருக்கும் 3வது நிறுவனம் வேதாந்தா குழுமம். இதற்கு முன் சிங்கப்பூரைச் சேர்ந்த ஐஜிஎஸ்எஸ் வென்சர்ஸ் கர்நாடகாவிலும், ஐஎஸ்எம்சி ஆகிய நிறுவனம் தமிழகத்திலும் தொழிற்சாலை அமைக்க உள்ளன.