retail inflation: cpi:ஆகஸ்ட் சில்லறைப் பணவீக்கம் 7சதவீதமாக உயர்வு: வட்டி வீதத்தை உயர்த்த ஆர்பிஐக்கு நெருக்கடி

கடந்த 3 மாதங்களாக நாட்டின் சில்லறைப் பணவீக்கம் குறைந்து வந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

In August, retail inflation increased to 7% as food costs increased.

கடந்த 3 மாதங்களாக நாட்டின் சில்லறைப் பணவீக்கம் குறைந்து வந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டிவீதத்தை மேலும் உயர்த்த வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.

மள,மளவெனச் சரியும் தங்கம் விலை! சவரனுக்கு ரூ.160குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

In August, retail inflation increased to 7% as food costs increased.

கடந்த ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 6.7%ஆக இருந்தநிலையில் ஆகஸ்டில் 7% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததுதான் பணவீக்கம் உயர்ந்துள்ளது. 

ஆனால் நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஆகஸ்ட் மாத சில்லறைப் பணவீக்கத்தில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. லேசான உயர்வுதான் ஏற்பட்டுள்ளது.உணவு மற்றும் எரிபொருள் உயர்வால்தான் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. 

எரிபொருளுக்கான ஆகஸ்ட் பணவீக்கம் 10.78 சதவீதமாகக் குறைந்துள்ளது. பருப்பு வகைகள் 9.6%, பழங்கள் 7.4%, காய்கறிகள் 13.2%, வாசனை திரவியங்கள் 14.9% என உள்ளன. ஆனால், சேவை, கல்வி, வீட்டு உபயோகப் பொருட்களுக்கான பணவீக்கம் அதிகரித்துள்ளது.

In August, retail inflation increased to 7% as food costs increased.

கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி! 158 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை ஏன்?

ஆகஸ்டில் கிராமப்புற சில்லறை பணவீகக்ம் 7.15 சதவீதமாகவும், நகர்புறங்களில் 6.7% ஆகவும் இருக்கிறது. நகர்புறங்களைவிட கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வாகவே இருக்கிறது. 

மேற்கு வங்கத்தில் சில்லறைப் பணவீக்கம் 8.9%, குஜராத்தில் 8.2%, தெலங்கானாவில் 8.1%, மகாராஷ்டிராவில் 7.99% என உள்ளன, மற்ற மாநிலங்கள் தேசிய சராசரியைவிட உயர்வாக உள்ளன. ஆனால் டெல்லியில் 4.2சதவீதமாக பணவீக்கம் குறைந்துள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் 4.9%, கர்நாடகாவில் 4.98% ஆக குறைந்துள்ளது.

நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது. ஆனால், கடந்த 8 மாதங்களாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் ரிசர்வ் வங்கி கடந்த 4 மாதங்களில் கடனுக்கான வட்டியை 140 புள்ளிகள் உயர்த்தி, 5.4% வட்டியை உயர்த்தியுள்ளது. 

நிதி அமைச்சகம் சுறுசுறுப்பு ! 2023-24ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்டோபரில் தொடக்கம்

In August, retail inflation increased to 7% as food costs increased.

இதற்கிடையே வரும் 28 முதல் 30ம் தேதிவரை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்த வேண்டிய நெருக்கடியும், அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் நிதிக்கொள்கைக் கூட்டத்தின் முடிவில் குறைந்தபட்சம் கடனுக்கான வட்டி 50 புள்ளிகள்வரை உயரக்கூடும். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios