Asianet News TamilAsianet News Tamil

post office: தினசரி ரூ.50 முதலீடு! கிடைப்பதோ ரூ.35 லட்சம்: அஞ்சலகத்தின் இந்த சேமிப்பு திட்டத்தை மறக்காதிங்க

தினசரி 50 ரூபாய் முதலீடு செய்து, முதிர்வுத் தொகையாக ரூ.34 லட்சம் பெறும் காப்பீடு திட்டத்தை இந்திய அஞ்சல்துறை அறிமுகம் செய்துள்ளது.

With THIS programme, you can earn returns of up to 35 lakhs rupees every day.
Author
First Published Sep 13, 2022, 3:14 PM IST

தினசரி 50 ரூபாய் முதலீடு செய்து, முதிர்வுத் தொகையாக ரூ.34 லட்சம் பெறும் காப்பீடு திட்டத்தை இந்திய அஞ்சல்துறை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தில் 19 வயது முதல் 55 வயதுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம். 

இந்திய சிறையில் இருப்பவர்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 18 சதவீதமாகக் குறைந்தது: என்சிஆர்பி தகவல்

அஞ்சல் துறையின் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்து தினசரி குறைந்த தொகையை முதலீடு செய்துவந்தால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும்போது, முதிர்வுத்தொகை அனைத்தும் குடும்பத்தினருக்கு சேரும். குறைந்த முதலீட்டில் அதிகமான லாபம் தரும், பாதுகாப்பான முதலீட்டை அஞ்சல்துறை கொண்டுவந்துள்ளது. 

இந்த காப்பீடு திட்டத்துக்கு கிராம சுரக்ஸா யோஜனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.50 தினசரி முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை முதிர்வுத் தொகையாகக் கிடைக்கும்.

அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகல் ரோத்தகி நியமனம்?

அஞ்சல்துறையின் கிராமப்புற அஞ்சலக காப்பீடு திட்டத்தின் கீழ் கிராம சுரக்ஸா யோஜனா திட்டம் வருகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்த பயனாளி ஒருவர் திடீரென மரணம் அடைந்தால், முதிர்வுத் தொகையை அரசாங்கம் வழங்கும்.

கிராம சுரக்ஸா யோஜனா –வின் விதிகள்,ஒழுங்குமுறைகள்

1.    இந்தியக் குடிமகனில் 19 முதல் 55 வயதுள்ள அனைவரும் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்யலாம்.

2.    கிராம சுரக்ஸா திட்டத்தில் ரூ.10ஆயிரம் முதல் ரூ.10 லட்சம்வரை முதலீடு செய்யலாம். 

3.    ஆண்டு காப்பீடு திட்டத்தை மாதத் தவணையாகவோ  அல்லது காலாண்டாகவோ அல்லது அரையாண்டாகாவோ ஆண்டுக்கு ஒருமுறையோ செலுத்தலாம்.

பிட்புல் நாய்களை கைவிடும் உரிமையாளர்கள்: அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: கொல்லத் துடிக்கும் கேரளா

4.    19 முதல் 55 வயதுள்ளவர்கள் குறைந்தபட்சமா ஒருவர் மாதம் ரூ.1515 காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அவர்களுக்கு முதிர்வுத்தொகையாக ரூ.31.60 லட்சம் கிடைக்கும்.

5.    19 வயதிலிருந்து 60 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.1411 செலுத்தி வந்தால், முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சம் கிடைக்கும்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios