Asianet News TamilAsianet News Tamil

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன? சிலிண்டர் விலை குறையுமா?

ஜூலை 1 முதல் என்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

These new rules will come into effect from July 1. Will the cylinder price come down?
Author
First Published Jun 29, 2023, 3:55 PM IST | Last Updated Jun 29, 2023, 4:07 PM IST

ஜூன் மாதம் முடிவடைய உள்ள நிலையில், ஜூலை மாதத்தில் இருந்து முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. குறிப்பாக கேஸ் சிலிண்டர், வணிக பயன்பாட்டு சிலிண்டர், CNG-PNG உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாற்றங்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஜூலை 1 முதல் என்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை பார்க்கலாம். 

கேஸ் சிலிண்டர் விலை : எல்பிஜி சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் அரசு எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து திருத்தம் செய்யப்படுகிறது. இம்முறை, ஜூலை 1ம் தேதி, எல்பிஜி கேஸ் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 19 கிலோ வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறைக்கப்பட்டாலும், 14 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இம்முறை எல்பிஜி விலை குறைய வாய்ப்புள்ளது.

சுவிட்சர்லாந்தில், உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கிய இந்திய குடும்பம்.. தலைசுற்ற வைக்கும் விலை!

ஏற்கனவே கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இந்த முறை சிலிண்டர் விலை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களுக்கு சில சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். எனவே சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளதாக கூறப்படுகிறது.

கிரெடிட் கார்டு செலவுகளில் 20% டிசிஎஸ் அறிமுகம்: ஜூலை 1, 2023 முதல், வெளிநாட்டில் உள்ள கிரெடிட் கார்டு செலவுகளை டிசிஎஸ் வரிக்கு உட்படுத்தும் புதிய விதிமுறை செயல்படுத்தப்படும். அதாவது 7 லட்சத்துக்கும் மேலான செலவுகளுக்கு 20 சதவீதம் வரை டிசிஎஸ் கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு, இந்த கட்டணம் 5 சதவீதமாக குறைக்கப்படும். மேலும், நீங்கள் வெளிநாட்டில் கல்விக் கடனைப் பெறுகிறீர்கள் என்றால், டிசிஎஸ் கட்டணம் 0.5 சதவீதமாகக் குறைக்கப்படும்.

CNG, PNG விலை: CNG மற்றும் PNG விலைகளில் ஏற்ற இறக்கங்கள்: முந்தைய மாதங்களைப் போலவே, ஜூலை மாதத்திலும் CNG மற்றும் PNG (Piped Natural Gas) விலையில் மாற்றங்கள் இருக்கலாம். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எரிவாயு விலையை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து மாற்றியமைத்து வருகின்றன.

வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு: வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் நெருங்குகிறது. உங்கள் ஐடிஆரை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்தியாவின் விலையுயர்ந்த கார் இவரிடம் தான் உள்ளது.. ஆனால் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி இல்லை..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios