Asianet News TamilAsianet News Tamil

tcs share price: டிசிஎஸ் பங்கு விலை 3 வாரங்களில் இல்லாத சரிவு

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின்(டிசிஎஸ்) நிறுவனத்திந் பங்கு மதிப்பு கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவு இன்று காலை வர்த்தகத்தில் 4 சதவீதம் சரிந்துள்ளது.

tcs share price dips 4 %: here is why
Author
Mumbai, First Published Jul 11, 2022, 1:28 PM IST

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின்(டிசிஎஸ்) நிறுவனத்திந் பங்கு மதிப்பு கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவு இன்று காலை வர்த்தகத்தில் 4 சதவீதம் சரிந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் சரிவு: தங்கம் விலை தொடர்ந்து குறைவது ஏன்? இன்றைய 11ம் தேதி நிலவரம் என்ன?

மும்பைப் பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்கு மதிப்பு 4.44 சதவீதம்அதாவது 144 புள்ளிகள் குறைந்து ஒரு பங்கு மதிப்பு ரூ.3,119.50 ஆக வீழ்ச்சி அடைந்தது. தேசியப் பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்கு மதிப்பு 4.40 சதவீதம் குறைந்து, ஒரு பங்கு மதிப்பு ரூ.3,121.80ஆகச் சரிந்தது.

tcs share price dips 4 %: here is why

டிசிஎஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் லாபம் எதிர்பார்த்த அளவு உயராதது, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணிகளால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத்த தொடங்கினர்.

விஜய் மல்லையாவுக்கு சிறை; அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 5.21 சதவீதம் உயர்ந்து, ரூ.9,478 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ.9008 கோடியாகத்தான் இருந்தது.  லாபம் 4.51சதவீதம் குறைந்துள்ளது. வருவாயைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் இருந்ததைவிட 4.28 சதவீதம் உயர்ந்து, ரூ.52,758 கோடியாக அதிகரித்துள்ளது.

tcs share price dips 4 %: here is why

2022ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தேசியப் பங்குச்சந்தையில் தகவல் தொழில்நுட்பப் பங்குகள் சொத்து மதிப்பு இரட்டை இலக்க வளர்ச்சியை இழந்துவிட்டது.

அம்பித் கேபிடல் சந்தை ஆய்வு நிறுவனம் கூறுகையில் “ டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிவதற்கு 3 காரணங்கள் உள்ளன. ஐரோப்பா, அமெரிக்காவில் நிலவும் சூழல், மேக்ரோ பொருளாதார சூழல் வலுவில்லாமல் இருப்பதுதான். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு வரும்போது, அது வருவாயை பாதிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

வருமான வரி படிநிலைகள் எத்தனை தெரியுமா? ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசித் தேதி என்ன?

tcs share price dips 4 %: here is why

காரணம் என்ன

சந்தை வல்லுநர்கள் கூறுகையில் “ அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக் குறைவு உருவாகத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் லாபம் முதல் காலாண்டில் 94.78 பில்லியன் டாலராக குறைந்துள்ளது, ஆனால், லாபம் 98.51 பில்லியனாக எதிர்பார்க்கப்பட்டது. ஐரோப்பாவில் பொருளாதார மந்தநிலை உருவாகி வருவது தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios