Asianet News TamilAsianet News Tamil

itr filing date: வருமான வரி படிநிலைகள் எத்தனை தெரியுமா? ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசித் தேதி என்ன?

வருமானவரி வரம்புக்குள் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் , வர்த்தகத்திலிருந்து வருமானம் ஈட்டாத தனிநபர்கள் அனைவரும் வருமானவரி ரிட்டனை வரும் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்வது அவசியம். 

calculate your income tax after revision in tax slabs: last of it return
Author
New Delhi, First Published Jul 9, 2022, 12:52 PM IST

வருமானவரி வரம்புக்குள் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் , வர்த்தகத்திலிருந்து வருமானம் ஈட்டாத தனிநபர்கள் அனைவரும் வருமானவரி ரிட்டனை வரும் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்வது அவசியம். 

வருமானவரி விலக்குக்கு அதிகமாக ஊதியம் ஈட்டும் தனிநபர்கள் அனைவரும் வருமானவரி செலுத்துவது அவசியம். வருமானவரி அனைவருக்கும் சீராக இல்லாமல், அவர்கள் பெறும் வருமானத்துக்கு ஏற்றார்போல் படிநிலையில் இருக்கும். வருமானம் உயர, உயர, வரிவீதமும் உயரும்.

calculate your income tax after revision in tax slabs: last of it return

ஆண்டு வருமானத்துக்கு ஏற்ப வருமான வரி படிநிலைகள் வரிசெலுத்துவோருக்கு மாறுபடும். வருமானவரி விதிப்படி, வரி செலுத்தும் தனிநபர்கள் 3 பிரிவில் பிரிக்கப்படுவார்கள். 

1.    60 வயதுக்கு கீழ்பட்ட தனிநபர்கள்(இந்தியாவில் வசிப்பவர்கள், இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள்)

2.    இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள்(60 முதல் 80 வயதுக்குள் இருப்போர்)

3.    இந்தியாவில் வசிக்கும் சூப்பர் சீனியர் குடிமக்கள்(80வயதுக்கு மேற்பட்டோர்)

2021-22ம் நிதியாண்டுக்கான வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்பவர்கள், 2022-23ம் ஆண்டுக்கும் தாக்கல் செய்பவர்கள் பழைய மற்றும் புதிய வரிவிதிப்பின் அடிப்படையில் தாக்கல் செய்யலாம்.

calculate your income tax after revision in tax slabs: last of it return

வருமானவரி படிநிலை

வரி வீதம்(புதிய முறை)

வரி வீதம்(பழைய முறை)

ரூ.0-ரூ.2.50 லட்சம்

வரி இல்லை

வரி இல்லை

ரூ.2.50,001 முதல் ரூ.5லட்சம்வரை

5 சதவீதம்

5 சதவீதம்

ரூ.5,00,001முதல் ரூ.7.50லட்சம் வரை

ரூ.12,500+ரூ.5லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 10%

ரூ.12,500+ரூ.5லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 20%

ரூ.7,50,001 முதல்ரூ.10 லட்சம் வரை

ரூ.37,500+ரூ.7.50லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 15%

ரூ.62,500+ரூ.7.50லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 20%

ரூ.10,00,001 முதல் ரூ.12.50 லட்சம் வரை

ரூ.75000+ரூ.10லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 20%

ரூ.1,12,500+ரூ.10லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 30%

ரூ.12,50001 முதல் ரூ.15 லட்சம் வரை

ரூ.1.25லட்சம்+ரூ.12.50லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 25%

ரூ.1.87,500+ரூ.12.50லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 30%

ரூ.15லட்சத்துக்கு மேல்

ரூ.1,87,500+ரூ.15லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 30%

ரூ.2,62,500+ரூ.15லட்சத்துக்கு மேல் செல்லும் தொகையில் 30%

புதிய வரிவிதிப்பு மாத ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு கீழ் பெறுபவர்களுக்கு குறைந்த வரி விதிக்கிறது. ஆனால், கழிவுகள், தள்ளுபடிகள் குறைவாகக் கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios