Asianet News TamilAsianet News Tamil

gold rate today: தங்கம் விலை மீண்டும் சரிவு: தங்கம் விலை தொடர்ந்து குறைவது ஏன்? இன்றைய 11ம் தேதி நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மீண்டும் சரிந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 9ரூபாயும், சவரணுக்கு ரூ.72ம் குறைந்துள்ளது. 

gold rate again slashes: check chennai price
Author
Chennai, First Published Jul 11, 2022, 10:00 AM IST

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மீண்டும் சரிந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 9ரூபாயும், சவரணுக்கு ரூ.72ம் குறைந்துள்ளது.  

gold rate again slashes: check chennai price
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,689க்கும், சவரண் ரூ.37,512க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.9 குறைந்து, ரூ4,680 ஆகவும், சவரணுக்கு ரூ.72 சரிந்து ரூ.37,440க்கும் விற்கப்படுகிறது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4680ஆக விற்கப்படுகிறது. 

itr filing date: வருமான வரி படிநிலைகள் எத்தனை தெரியுமா? ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசித் தேதி என்ன?

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் கடைசி இரு நாட்கள் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் கிராமுக்கு, ரூ92 வரை குறைந்தது, சவரனுக்கு ரூ.732 குறைந்தது. சவரன் ரூ.38ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை திடீரென ரூ37ஆயிரத்துக்கு குறைந்தது. ஏறக்குறைய ரூ.1056 சவரனுக்கு குறைந்தது.

gold rate again slashes: check chennai price

தங்கம் விலை குறையக் காரணம் என்ன?

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட டாலரில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, அதிகமான வட்டி கிடைக்கும் என நம்புகிறார்கள். இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீடு குறைந்துள்ளது. 

இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி! சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 குறைக்க அரசு உத்தரவு

 டாலர் மதிப்புதான் வலுப்பெறும்போது தங்கம் வாங்க அதிகமான டாலர்களை கொடுத்து தங்கம் வாங்க வேண்டியதிருக்கும். இதனால், தங்கத்தின் மீதான முதலீடு குறையும்,  தங்கத்தின் மதிப்பு குறைவதற்கு வாய்ப்புள்ளது.

gold rate again slashes: check chennai price

ஆதலால், பெடரல் வங்கியின் வட்டி குறித்த இந்த வார அறிவிப்பு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும், விலை மேலும் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

இதன் காரணமாகவே கடந்த வாரத்தில்  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.700க்கு மேலும், அதற்கு முந்தைய வாரம் ரூ.1000க்கு மேலும் குறைந்திருந்தது.  தங்கம்  இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தக் காரணியும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அலர்ட்! இதைச் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படும்

gold rate again slashes: check chennai price

வெள்ளி விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசு  அதிகரித்து ரூ.63.00க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.200 அதிகரித்து, ரூ.63000க்கு விற்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios