டாடா குரூப் நிறுவனத்தின் அதிக சம்பளம் வாங்கும் 2-வது நிர்வாகி.. இத்தனை கோடி சம்பளமா?
ஐஐடி-ஐஐஎம் முன்னாள் மாணவரான சௌரப் அகர்வால், 2022-23 நிதியாண்டில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், குரூப் சிஎஃப்ஓ (தலைமை நிதி அதிகாரி) ஆகவும் இருந்துள்ளார்.
டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், 2023 நிதியாண்டில் இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். அவரின் சம்பளம் ரூ. 113 கோடியாகும். அவரை தொடர்ந்து டாடா சன்ஸ் நிறுவனத்தின் முக்கியமான நிதிப் அலுவல்களை வழிநடத்துபவர் சௌரப் அகர்வால் அதிக சம்பளம் வாங்கும் 2-வது நிர்வாகியாக உள்ளார். ஐஐடி-ஐஐஎம் முன்னாள் மாணவரான சௌரப் அகர்வால், 2022-23 நிதியாண்டில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், குரூப் சிஎஃப்ஓ (தலைமை நிதி அதிகாரி) ஆகவும் இருந்துள்ளார்.
டாடா சன்ஸ் ஆண்டிற்கான டாடா சன்ஸ் ஆண்டறிக்கையின்படி, மார்ச் 31, 2023 நிலவரப்படி, பட்டியலிடப்பட்ட முதலீடுகளின் சந்தை மதிப்பு ரூ.11,20,545.24 கோடியு. மேலும் டாடா குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் ரூ.20,71,467 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. salt-to-software குழுமத்தின் நிதி அலுவல்களை நிர்வகிக்கும் சௌரப் அகர்வால், என் சந்திரசேகரனின் மிக முக்கியமான நியமனங்களில் ஒருவர் ஆவார்.
இந்தியாவின் 7 பெரும் பணக்கார குடும்பங்கள்.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு..
யார் இந்த சௌரப் அகர்வால்?
சௌரப் அகர்வால் வணிக வட்டாரங்களில் சிறந்த நிர்வாகிகளில் ஒருவராக அறியப்படுகிறார். பிரபல முதலீட்டு வங்கியாளரான அவர் இந்தியாவின் சிறந்த ஒப்பந்தங்களில் ஒன்றான வோடாஃபோன் மற்றும் ஐடியாவின் 23 பில்லியன் டாலர்கள் இணைப்புக்கு பின்னணியில் இருந்தவர்களில் முக்கியமானவர். சௌரப் அகர்வால், ரூர்க்கியில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) இரசாயன பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் கல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் (IIM) முன்னாள் மாணவர் ஆவார்.
2017-ம் ஆண்டில் அவர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சி.எஃப்.ஓ-வாக மாறினார். டாடா குழுமத்தில் சேருவதற்கு முன்பு சில பெரிய நிறுவனங்களில் சௌரப் அகர்வால் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் கார்ப்பரேட் மூலோபாயத் தலைவர், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் கார்ப்பரேட் நிதியின் (தெற்காசியா) பிராந்தியத் தலைவர் மற்றும் DSP மெரில் லிஞ்சில் முன்னணி முதலீட்டு வங்கிப் பிரிவு தலைவர் என பல பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். 2014 இல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஐபிஓவின் ஆலோசகராகவும் சௌரப் அகர்வால் பணியாற்றினார்.
சௌரப் அகர்வாலின் சம்பள விவரம்
சௌரப் அகர்வால் 2023 நிதியாண்டில் 27.82 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இதில் மொத்த சம்பளமாக ரூ.5.56 கோடியும், கமிஷனாக ரூ.22 கோடியும் அடங்கும். கடந்த 2021-ம் நிதியாண்டில் 21.45 கோடியுடன் ஒப்பிடும்போது, 2022-ம் நிதியாண்டில் அவரின் சம்பளம் 21 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.