Stock Market Today இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
Stock Market Today இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
கடந்த 4 நாட்கள் வர்த்தகத்துக்குப்பின் இன்று காலை பங்குச்சந்தையில் உயர்வு காணப்படுகிறது. சர்வதேச சந்தைச் சூழல் நிலையற்றதாக இருப்பதால் இந்த ஏற்றம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியாது.
சரிவில் இருந்து மீளாத பங்குச்சந்தை| சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி! அதானி பவர் அம்போ

அமெரிக்கப் பங்குச்சந்தையில் நேற்று ஏற்றம் கண்டதால், இன்று ஆசியச் சந்தைகளிலும் உயர்வு காணப்படுகிறது, அதன் எதிரொலி இந்தியச் சந்தைகளிலும் காலை முதல் நீடிக்கிறது. ஆனாலும் அமெரி்க்க பெடரல் ரிசர்வ், வட்டிவீதத்தை 50 புள்ளிகள்வரை மார்ச் மாதத்தில் உயர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெறுவதும் தொடர்ந்து வருகிறது.
இந்தியப் பங்குச்சந்தை சரிவில் அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியும் முக்கியக் காரணமாகும். முக்கிய நிறுவனங்களின்பங்குகள் சரியும்போது அது பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைக்கிறது.
காலை வர்த்தகத்தில் மும்பை, தேசியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து, 59,743 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 36 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,548 புள்ளிகளி்ல் வர்த்தகத்தை நடத்தி வருகிறது

பங்குச்சந்தை படுவீழ்ச்சி|ரூ.7 லட்சம் கோடி காலி!சென்செக்ஸ்927 புள்ளிகள் சரிவு:4 காரணங்கள்!
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 7 நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவில் உள்ளன மற்ற நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் செல்கின்றன.
நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், டிவிஸ் லேப்ஸ், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. ஓஎன்ஜிசி, ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், எய்ச்சர் மோட்டார்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, லார்சன் அன்ட் டூப்ரோ பங்குகள் சரிந்துள்ளன
நிப்டி துறைகளில் ஊடகம் மற்றும் உலோகத் துறை பங்குகள் மட்டுமே சரிந்துள்ளன. மற்ற துறைப் பங்குகள் லாபத்தில் செல்கின்றன. குறிப்பாக பொதுத்துறை வங்கி, ரியல்எஸ்டேட், ஐடி, ஆட்டோமொபைல் துறை பங்குகள் லாபத்தில் உள்ளன.
