Asianet News TamilAsianet News Tamil

Paytm:பலத்த அடி! 20 கோடி டாலர் மதிப்புள்ள PayTm பங்குகளை விற்பனை செய்கிறது SoftBank

பேடிஎம்(Paytm) நிறுவனத்தில் பெரும்பான்மையாக முதலீடு செய்துள்ள சாப்ட்பேங் தனது பங்குகளை விற்பனை செய்ய இருப்பதால், பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மோசமாக சரிந்து வருகிறது. 

SoftBank will sell Paytm shares worth USD 200 million
Author
First Published Nov 17, 2022, 11:49 AM IST

பேடிஎம்(Paytm) நிறுவனத்தில் பெரும்பான்மையாக முதலீடு செய்துள்ள சாப்ட்பேங் தனது பங்குகளை விற்பனை செய்ய இருப்பதால், பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மோசமாக சரிந்து வருகிறது. 

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: வீழ்ச்சியில் சென்செக்ஸ், நிப்டி: பேடிஎம் பங்கு 9% சரிவு

பேடிஎம் நிறுவனத்தில் அதிகமான முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்று சாப்ட்பேங்(SoftBank).  பேடிஎம் நிறுவனத்தில் 20 கோடி மதிப்பிலான பங்குகளை சாப்ட்பேங் வைத்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த கோடீஸ்வரர் மசாயோஷி நடத்தும் வங்கிதான் சாப்ட்வங்கி. இந்த வங்கி வைத்திருந்த பேடிஎம் பங்குகளுக்கான லாக்கின் பிரீட் காலம் முடிந்துவிட்டது.

SoftBank will sell Paytm shares worth USD 200 million

இதையடுத்து, சாப்ட்வங்கி தன்னிடம் இருக்கும் 200 மில்லின் டாலர் மதிப்பிலான பேடிஎம் பங்குகளை ஒன்97 கம்யூனிகேஷன்(One97 Communications) நிறுவனத்துக்கு பிளாக் டீல் வழியாக விற்பனை செய்ய இருக்கிறது. 

ஏற்றத்தில் தங்கம் விலை! 3 நாட்களில் ரூ.500க்கு மேல் உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

அதாவது பேடிஎம் நிறுவனத்தின் ஒரு பங்கின் சந்தை மதிப்பு ரூ 601.45 ஆக இருக்கும்போது, அந்த விலையைவிட 8 சதவீதம் குறைவாக, ரூ.555க்கு விற்பனை செய்ய உள்ளது சாப்ட்பேங்
இந்த பங்கின் விலை இன்று நடக்க இருக்கிறது, இந்த விற்பனை மூலம் சாப்ட்பேங், ஏற்ககுறைய ரூ.1,629 கோடி நிதிதிரட்டஇருக்கிறது. இது பங்கின்ஒட்டுமொத்த மதிப்பைவிட குறைவுதான்.

ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் நிறுவனம் பேடிஎம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு எடுத்த செய்தி அறிந்ததும் பங்குச்சந்தையில் பேடிஎம் பங்கு மதிப்பு கடுமையாகச்சரிந்தது. 

EMI அதிகரிக்கும்!SBI வங்கியில் கடன் வாங்கியோருக்கு ஷாக்!MLCR 15 புள்ளிகள் உயர்வு

SoftBank will sell Paytm shares worth USD 200 million

பேடிஎம் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் தவிர, அமெரிக்காவின் வாரன் பபெட்டின் பெர்க்ஸையர் ஹாத்வே, எலிவேஷன் கேபிடல், சீனாவின் அலிபாபா குழுமம் ஆகியோரும் முதலீடு செய்துள்ளனர்.

பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் ஷேகர் ஷர்மா  கூறுகையில் “ எங்கள் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் அதிகமான பணப்புழக்கத்துக்காகவும், லாபநோக்கத்துக்காகவும் பங்குகளை விற்கிறார்கள்” எனத் தெரிவித்தார்

பேடிஎம் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியவர்களில் 85 சதவீதம் பேருக்கு கட்டாய ஓர் ஆண்டு லாக்கின் காலம் இருக்கிறது. இந்த லாக்கின் காலம் முடிந்தபின் முதலீட்டாளர்கள் விரும்பினால் பங்குகளை விற்பனை செய்யலாம். அந்தவகையில் சாப்ட்பேங்க்கிற்கான லாக்கின் காலம் முடிந்ததால் பங்குகளை விற்கிறது


 

Follow Us:
Download App:
  • android
  • ios