மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை இன்று தொடங்கினாலும் ஊசலாட்டம் காணப்படுகிறது.
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை இன்று தொடங்கினாலும் ஊசலாட்டம் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் சந்தை நிலவரம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அமெரிக்கப் பங்குச்சந்தையான டோவ் ஜோன்ஸ் தொடர்ந்து 4வது நாளாகச் சரிந்தது.
2-வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏமாற்றம்! சரிவு ஏன்?

அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வட்டியை 75 புள்ளிகள் உயர்த்தியது, இன்று அமெரிக்காவின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாவது போன்ற காரணிகளால் சர்வதேச அளவில் வர்த்தகம் சுறுசுறுப்பாக நடக்கவில்லை. இந்த இரு காரணிகளையும் சர்வதேச முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
இது தவிர ஆர்பிஐ கடந்த 3 காலாண்டுகளாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீத்தை உயர்த்தி வருகிறது. ஆனால், பணவீக்கத்தைக் குறைக்க முடியவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்தது குறித்தும், அதற்கான காரணத்தையும் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கையாக அனுப்பியது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆர்பிஐ தோல்வி:மத்திய அரசுக்கு விளக்கமளிக்கிறார்சக்திகாந்த தாஸ்
கடந்த 2016 பணக்கொள்கை உருவாக்கப்பட்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இலக்கு உருவாக்கப்பட்டபின், ரிசர்வ் வங்கி இதுபோன்று அறிக்கை அளிப்பது இதுதான் முதல்முறையாகும். இந்த காரணியும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச்சந்தை தொடங்குவதற்கு முன் சரிவில் இருந்தது. ஆனால் வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தைகள் ஏற்றத்தில் பயணித்து வருகின்றன.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 133 புள்ளிகள் உயர்ந்து, 60,970 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தின. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி51.50 புள்ளிகள் ஏற்றத்துடன்,18,104 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நடத்தின.
ஆனால் சிறிது நேரத்தில் சந்தையில் சரிவு காணப்பட்டு, சென்செக்ஸ் 20 புள்ளிகளும், நிப்டி 4 புள்ளிகளும் வீழ்ந்தன. பின்னர் மீண்டும் உயர்ந்தது. இதுபோன்று காலை நேரத்தில் கடும் ஊசலாட்டத்துடன் வர்த்தகம் நடந்து வருகிறது.
ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியிருக்கிங்களா! கவனம்! இதைப் படிக்க மறக்காதிங்க
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 8 நிறுவனப் பங்குகள் விலை சரிந்துள்ளன, மற்ற 22 பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது. குறிப்பாக பஜாஜ்பின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, டாடா ஸ்டீல், மகிந்திரா அன்ட் மகிந்திரா,மாருதி, பவர்கிரிட், ஐடிசி, ஹெச்டிஎப்சி டிவின்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன.

தேசியப்பங்கு்சந்தை நிப்டியில் ஹின்டால்கோ, பஜாஜ்பின்சர்வ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் லாபமீட்டி வருகின்றன. இன்போசிஸ், ஹீரோ மோட்டார்கார்ப்பரேஷன், டேவிஸ் லேப், டாக்டர் ரெட்டீஸ், அப்பலோ மருத்துவமனை ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன
ஆசியச் சந்தையிலும் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. நிக்கி, கோஸ்பி, கோஸ்டாக் ஆகியவை 2 சதவீதம் சரிந்தன, ஹாங்செங், ஷாங்காய் பங்குச்சந்தை 2 சதவீதம் உயர்வுடன் முடிந்தன.
இன்று வர்த்தக நேரத்தில் டைட்டன், சிப்லா, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், மரிகோ, இன்டர்குளோப் ஏவியேஷன், கெயில் உள்ளிட்ட நிறுவனங்களின் 2ம் காலாண்டு முடிவுகள் வெளியாகின்றன.
