Blue Tick on Twitter: ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியிருக்கிங்களா! கவனம்! இதைப் படிக்க மறக்காதிங்க

ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியவர்களுக்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ப்ளூ டிக் வாங்கியவர்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் வகையில் போலியாக மின்அஞ்சல்கள் வலம் வருவதாக எச்சரிக்கை எழுந்துள்ளது.

Twitter Blue Tick users, take note! Do you receive Twitter warning emails?

ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியவர்களுக்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ப்ளூ டிக் வாங்கியவர்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் வகையில் போலியாக மின்அஞ்சல்கள் வலம் வருவதாக எச்சரிக்கை எழுந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கியுள்ளார். எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவது என்பது இதற்கு முன் கட்டணமின்றி இருந்தநிலையில் அதை கட்டணத்துக்குள் எலான் மஸ்க் கொண்டு வந்தார்.

Twitter Blue Tick users, take note! Do you receive Twitter warning emails?

ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கம்: எலான் மஸ்க் திட்டம்

இதன்படி, ப்ளூ டிக் வாங்கியவர்கள் மாதம் 8டாலர் செலுத்த வேண்டும், வாங்க விரும்புவோர் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்தார். இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

இந்நிலையில் ப்ளூ டிக் வாங்கியவர்களுக்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ப்ளூ டிக் வாங்கியவர்களின் ஆவணப் பரிசோதனை, நம்பகத்தன்மையை பரிசோதிக்க மின்அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. இதில் பல மின்அஞ்சல்கள் ஹேக்கர்களால் அனுப்பப்படுவதாகவும், தெரியாமல் கிளிக் செய்தால் கணக்கு ஹேக் செய்யப்படுவதோடு, தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் திருடப்படும் அபாயமும் எழுந்துள்ளது.

Twitter Blue Tick users, take note! Do you receive Twitter warning emails?

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்: பராக் அகர்வால், விஜயா கடே நீக்கி அதிரடி

தொழில்நுட்ப எழுத்தாளர் ஜாக் விட்டேக்கர் ட்விட்டரில் பதிவிட்ட எச்சரிக்கை செய்தியில் “ ட்விட்டர் நிறுவனம் அனைவரின் கணக்கையும் ஆய்வு செய்யும் பணியில் பயனாளிகளுக்குபுதிய சிக்கல் எழுந்துள்ளது. ட்விட்டர் கணக்கை உறுதிப்படுத்தும் மின்அஞ்சல்கள் பலநேரங்களில் போலியான மின்அஞ்சல்களாக வந்து சைபர்பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்துகின்றன.

 குறிப்பாக பத்திரிகை துறையில் இருப்போருக்கு அடிக்கடி இதுபோன்ற போலியான மின்அஞ்சல்கள் வருகின்றன. அது மட்டுமல்லாமல் ட்விட்டர் லாகின் போன்று வடிவமைக்கப்பட்டு வரும் மின்அஞ்சலில் லாகின் செய்யும்போது,பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன.

Twitter Blue Tick users, take note! Do you receive Twitter warning emails?

என்னாச்சு எலான் மஸ்க் ! சமையலறை சிங்க்குடன் ட்விட்டர் அலுவலகம் வந்த வீடியோவால் பரபரப்பு

இதனால்,  ஹேக்கர்கள் பயனாளிகளின் பாஸ்வேர்டு, யூசர்நேம் ஆகியவற்றை திருடவும், தனிப்பட்ட விவரங்களை திருடவும் வாய்ப்புள்ளது. ஆதலால், ப்ளூ டிக் வாங்கியவர்கள், தங்கள் தனிப்பட்ட விவரங்களை ட்விட்டரில் ஆய்வுக்காக வரும் மின்அஞ்சலில் பகிரும்போது, கவனமாக இருக்க வேண்டும்”என எச்சரித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios