share market today : சர்வதேச காரணிகள் சாதகமாக இருந்தபோதிலும் கூட மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

சர்வதேச காரணிகள் சாதகமாக இருந்தபோதிலும் கூட மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

உயர்வுடன் முடிந்தது

பங்குச்சந்தையில் நேற்று மும்பை பங்குச்சந்தை 1335 புள்ளிகளும், நிப்டி 18ஆயிரம் புள்ளிகளையும் கடந்து வர்த்தகத்தை முடித்தன. இதேபோன்று இன்றும் வர்த்தகத்தை உற்சாகத்துடன் பங்குச்சந்தை தொடங்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று உயர்வுடன் முடிந்தால், அந்த தாக்கம் இந்தியப்பங்குசந்தையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் வர்த்தகம் தொடங்கும்முன்பே சரிவுடன் இருந்தன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்து வந்தநிலையில் இன்று திடீரென பேரலுக்கு 2 டாலர் அதிகரி்த்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையியான போரில் ரஷ்யா மீது தடைகள் தீவிரமாகும் என்ற எதிர்பார்ப்பு, ஈரானுடன் பேச்சு வார்த்தை நிறுத்தம் போன்றவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், முதலீட்டாள்ரகள் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

சரிவு

இதனால் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100புள்ளிகள் சரிவுடனும், நிப்டி 18,050 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தும் வர்த்தகத்தை தொடங்கின. இந்த சரிவு சிறிதுநேரத்தில் சரியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது.

லாபம் சரிவு

மும்பைப் பங்குசந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 16 பங்குகள் லாபத்தில் செல்கின்றன, 16 பங்குகள் மட்டும் சரிவில் உள்ளன. ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், கோடக் வங்கி,விப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன.

மகிந்திரா அன்ட் மகிந்திரா, என்டிபிசி, பவர்கிர்ட், சன்பார்மா, டிசிஎஸ், லார்சன்அன்ட் டூப்ரோ, நெஸ்ட்லே, மாருதி, ஐடிசி, டாடாஸ்டீல்,டைட்டன், டெக்மகிந்திரா, பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக் ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன.

நிப்டியில் ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, ஊடகம், உலோகம், மருந்துத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் லாபத்தில் செல்கின்றன. மாறாக, வங்கி, பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், நிதிச்சேவை ஆகிய துறைகள் சரிவில் உள்ளன