Asianet News TamilAsianet News Tamil

Share Market Today: ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை ! சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்வு, ஐடி பங்குகள் லாபம்

வாரத்தின் முதல்நாளான இன்று தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி உயர்வுடன் முடிந்தன. 

Sensex up 319 points; Nifty closes over 18,100 IT companies outperform
Author
First Published Jan 23, 2023, 3:55 PM IST

வாரத்தின் முதல்நாளான இன்று தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி உயர்வுடன் முடிந்தன. 

அமெரிக்காவின் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது, வங்கித்துறை பங்குகள், தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 

பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: காரணம் என்ன?

பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட், நிறுவனங்களின் 3வது காலாண்டு முடிவுகள் சாதகமாக வருவது, வங்கிப்பங்குகள் லாபத்துடன் செல்வது போன்றவை பங்குச்சந்தை உயர்வுடன் முடிய காரணமாகும்.

தொடர்சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றம்: HUL பங்கு சரிவு

இந்தக் காரணிகளால் காலையில் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை மாலை வர்த்தகம் முடியும்வரை அந்த ஏற்றத்தைத் தக்கவைத்தது. மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 319 புள்ளிகள் உயர்ந்து, 60,941 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 90 புள்ளிகள் அதிகரி்த்து, 18,118 புள்ளிகளில் நிறைவடைந்தது.

மும்பை பங்குசந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 21 நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன, 9 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவில் முடிந்தன. ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, மாருதி, டைட்டன், ரிலையன்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, டாடா ஸ்டீல், என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட்ஆகிய பங்குகள் மதிப்பு சரிந்துள்ளது.

கரடி வலையில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: FMCG பெரும் சரிவு

நிப்டியில் இந்துஸ்தான் யூனிலீவர், டெக் மகிந்திரா, எய்ச்சர் மோட்டார்ஸ், யுபிஎல் பங்குகள் அதிக லாபமடைந்தன. அல்ட்ராடெக் சிமெண்ட், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல் பங்குகள் மதிப்பு சரிந்தன.

நிப்டியில், ஆட்டோமொபைல், வங்கி, எப்எம்சிஜி, சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் லாபமடைந்தன. ஐடி பங்குகள் 2 சதவீதம் உயர்ந்தன. ரியல்எஸ்டேட், மின்சக்தி பங்குகள் மதிப்பு 0.4 முதல் 0.7சதவீதம் சரிந்தன.

Follow Us:
Download App:
  • android
  • ios