அதிரடி காட்டிய சென்செக்ஸ், நிஃப்டி; தொடர்ந்து உயரும் இந்தியப் பங்குச் சந்தைக்கு காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் உயர்ந்து காணப்பட்டது.
இந்தியப் பங்குச் சந்தையில் இன்று 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் ஐந்தாவது நாளாக 302.30 புள்ளிகள் அதிகரித்து அதாவது 0.45 சதவீதம் அதிகரித்து, 67,097.44 புள்ளிகளில் முடிந்தது. இன்று வர்த்தகத்தின் ஊடே பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 376.24 புள்ளிகள் அதிகரித்து அதாவது 0.56 சதவீதம் அதிகரித்து அதிகபட்சமாக 67,171.38 புள்ளிகளை தொட்டு இருந்தது. இதுவே இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்ச உயர்வாகும்.
இதேபோல் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 83.90 புள்ளிகள் அதிகரித்து அதாவது 0.42 அதிகரித்து 19,833.15 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகத்தின் ஊடே 102.45 புள்ளிகள் அதிகரித்து அதாவது 0.51 சதவீதம் அதிகரித்து 19,851.70 புள்ளிகளுக்கு உயர்ந்து காணப்பட்டது. சென்செக்ஸ் இன்று முதன் முறையாக 67,000 புள்ளிகளைக் கடப்பதற்கு ஐடி பங்குகள் மிகவும் கை கொடுத்தன.
ஒரு நாளைக்கு ரூ. 30 லட்சம்.. ரத்தன் டாடா குழுமத்தில் அதிக சம்பளம் வாங்கும் தமிழர்..
ஐடி நிறுவனங்கள் தங்களது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நல்ல வருமானத்தை ஈட்டி இருப்பது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வெளிநாட்டு முதலீடுகள், சாதகமான பொருளாதார குறியீடுகள், வலுவான உலக பொருளாதார சந்தை, பணவீக்கம் குறைந்து வருதல் என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. கடந்த ஐந்து மாதங்களாக வெளிநாட்டினர் அதிகளவில் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பு வைப்பு டேட்டாவும் இதைத்தான் காட்டுகிறது.
எச்டிஎஃப்சி வங்கியின் மூளையாக திகழ்ந்த ஹஸ்முக் தகோர்தாஸ் பரேக்; யார் இவர்?
வெளிநாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 7,936 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ. 11,631 கோடி, மே மாதத்தில் ரூ. 43,838 கோடி, ஜூன் மாதத்தில் ரூ. 47,148 கோடி என இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வந்துள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரை மட்டும் ரூ. 34,444 கோடி அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்களது முதலீடுகளை அதிகரித்து வந்துள்ளனர்.
இன்றைய சென்செக்ஸ் வர்த்தகத்தில் என்டிபிசி, பஜாஜ் ஃபினான்ஸ், இண்டஸ்இந்த் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, பவர் கிரிட், லார்சன் அண்டு டர்போ ஆகியவற்றின் பங்குகள் லாபம் ஈட்டி இருந்தன.