Stock Market Today: பள்ளத்தில் பங்குச்சந்தை| சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி, நிப்டி சரிவு:அதானி பங்கு காலி

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள்  கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Sensex drops by 350 points, and Nifty is at 17,750: Adani Enterprises lose

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

அமெரிக்க பொருளாதார நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களில் பொருளாதார மந்தநிலையில் இருந்து தப்பிக்கும் அறிகுறிகள் தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் பணவீக்கம் குறைந்தவாறு இல்லை. இதனால் அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்த தயாராகிறது என்பது உறுதியாகிவிட்டது. இதன் காரணமாக கடன் மற்றும் பங்குப்பத்திரங்கள் மதிப்பு உயரத் தொடங்கியது. 

Sensex drops by 350 points, and Nifty is at 17,750: Adani Enterprises lose

இந்தியா, சீனா மட்டும் உலகப் பொருளாதார வளர்ச்சியில் பாதிக்கும் அதிகமாக பங்களிக்கும்: ஐஎம்எப் நம்பிக்கை

இந்த சூழல்கள் சர்வதேசசந்தையிலும் காலை முதல் எதிரொலித்து வருகிறது. இந்தியச்சந்தையிலும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரிக்கலாம். இந்த அச்சத்தால், பங்குச்சந்தைகள் காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சரிவில் உள்ளன.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 504 புள்ளிகள் சரிந்து, 60,168 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 153 புள்ளிகள் வீழ்ந்து 17,672 புள்ளிகளிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், டெக் மகிந்திரா, இன்போசிஸ், எச்சிஎல் டெக், விப்ரோ பங்குகள் தொடர் சரிவில் உள்ளன. கோல் இந்தியா, பிரிட்டானியா, ஹின்டால்கோ, அப்பலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

பங்குச்சந்தையில் ஊசலாட்டம்| சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி

Sensex drops by 350 points, and Nifty is at 17,750: Adani Enterprises lose

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களில் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்தில் செல்கின்றன மற்ற 27 நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துள்ளன. குறிப்பாக சன்பார்மா, டாடா ஸ்டீல், லார்சன் அன்ட் டூப்ரோ பங்குள் லாபத்தில் உள்ளன.

அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனப் பங்குகளும் சரிவில் உள்ளன. அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனப் பங்குகள் அதிபட்சமாக 7% சரிந்துள்ளன. அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி க்ரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு சராசரியாக 5% சரிந்துள்ளது.

நிப்டி துறைகளில் மருந்துத்துறை பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன மற்ற அனைத்துத் துறைப்பங்குகளும் சரிவில் உள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios