Asianet News TamilAsianet News Tamil

Share Market Live Today:சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி! அதானி கேஸ் இழப்பு

Stock Market Live Today: மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதானி கேஸ் பங்குகள் 10 சதவீதம் சரிந்துள்ளன. 

Sensex drops 120 points. Nifty at 17,600; IT and power stocks under pressure
Author
First Published Jan 31, 2023, 9:36 AM IST

Stock Market Live Today: மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதானி கேஸ் பங்குகள் 10 சதவீதம் சரிந்துள்ளன. 

பிப்ரவரி 1ம்தேதியான நாளை நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த இரு பெரும் அம்சங்களை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். 

Sensex drops 120 points. Nifty at 17,600; IT and power stocks under pressure

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி உயர்வு: அதானிக்கு அடிக்குமேல் அடி

நாடாளுமன்றத்தில் இன்று பொருளதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. உலகளவில் பொருளதாரமந்தநிலை நீடிப்பதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பதை அறிய முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். 

இதனால் பங்குச்சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடனே வர்த்தகத்தில் ஈடுபட்டதால், காலை முதலே சரிவு காணப்படுகிறது. பொருளாதார ஆய்வறிக்கை நிலவரம், பட்ஜெட் தாக்கல் ஆகியவற்றைப் பொருத்து பங்குச்சந்தையின் போக்கு முடிவாகும். 

காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 329 புள்ளிகள் சரிந்து, 59,170 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 94 புள்ளிகள் குறைந்து, 17,554 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.

Sensex drops 120 points. Nifty at 17,600; IT and power stocks under pressure

இந்தியாவின் எதிர்காலம் அதானி-யின் திட்டமிட்ட கொள்ளையால் தடுக்கப்படுகிறது: ஹிண்டன்பர்க் பதிலடி

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 15 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 15 நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன. அல்ட்ராசிமெண்ட், பவர்கிரிட், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மாருதி, ஐடிசி, டைட்டன், டாடாமோட்டார்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

நிப்டியில் அதானி என்டர்பிரைசஸ், பிபிசிஎல், அதானி போர்ட்ஸ், யுபிஎல், ஜேஎஸ்டபிள்யு  ஸ்டீல், உள்ளிட்ட பங்குகள் அதிக லாபமடைந்துள்ளன. டெக் மகிந்திரா, லார்சன் அன்ட் டூப்ரோ, அப்பல்லோ மருத்துவனை, எச்சிஎல், ஹிண்டால்கோ பங்குகள் விலை குறைந்துள்ளன

Sensex drops 120 points. Nifty at 17,600; IT and power stocks under pressure

இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு:அதானி குழுமம் 413 பக்க பதிலடி

நிப்டியில், பொதுத்துறை வங்கி, உலோகம்,கட்டுமானம், ஆட்டமொபைல் துறை பங்குகள் லாபத்தில் உள்ளன. ஐடி, மருந்துத்துறை, எப்எம்சிஜி,எரிசக்தி துறைப் பங்குகள் சரிவில் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios