Asianet News TamilAsianet News Tamil

இந்த சிறப்பு திட்டத்தின் கால அவகாசம் அகஸ்ட் 15 வரை நீட்டிப்பு.. SBI வங்கி வெளியிட்ட குட்நியூஸ்

அம்ரித் கலாஷ் என்ற சிறப்பு FD திட்டத்தின் கடைசி தேதியை எஸ்பிஐ மீண்டும் நீட்டித்துள்ளது.

SBI Amrit Kalash FD scheme's last date extended till August 15.. Good news released by SBI Bank
Author
First Published Jun 30, 2023, 10:38 AM IST

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. மேலும் புதிய முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் அம்ரித் கலாஷ் நிலையான வைப்புத் திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்தது. இந்த திட்டம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அம்ரித் கலாஷ் திட்டத்தின் கடைசி தேதியை எஸ்பிஐ மீண்டும் நீட்டித்துள்ளது. அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டம் ஆகஸ்ட் 15, 2023 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன? சிலிண்டர் விலை குறையுமா?

அம்ரித் கலாஷ் நிலையான வைப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீத வட்டி விகிதத்தையும் மற்றவர்களுக்கு 7.1 சதவீதத்தையும் வழங்குகிறது. மற்ற தவணைக்காலங்களுடன் ஒப்பிடும்போது SBI தனது மூத்த குடிமக்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கும் மிக உயர்ந்த வட்டி விகிதம் இதுவாகும்.

அம்ரித் கலாஷ் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • இந்த சிறப்பு FD திட்டம், 2 கோடி ரூபாய்க்கு குறைவான என்ஆர்ஐ ரூபாய் கால வைப்புத்தொகை உட்பட உள்நாட்டு சில்லறை கால வைப்புகளுக்கு பொருந்தும்.
  • இந்த சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தின் காலம் 400 நாட்கள்.
  • பொது முதலீட்டாளர்களுக்கான வட்டி விகிதம் 7.10 சதவிகிதம், மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவிகிதம் கிடைக்கும்.
  • 7.6 சதவீத வட்டியில், அம்ரித் கலாஷ் வைப்புத்தொகையின் வருடாந்திர வட்டி விகிதம், மூத்த குடிமக்களுக்கு 7.82 சதவீதமாகவும் மற்றவர்களுக்கு 7.1 சதவீத வட்டியில் 7.29 சதவீதமாகவும் இருக்கும்.
  • அம்ரித் கலாஷ் திட்டத்தின் வட்டி மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
  • சிறப்பு கால வைப்புத்தொகைகளுக்கு, முதிர்ச்சியின் போது வட்டி வழங்கப்படும்.
  • புதிய மற்றும் புதுப்பித்தல் டெபாசிட்டுகளுக்கும் FD செல்லுபடியாகும்.
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அம்ரித் கலாஷ் திட்டத்தின் கீழ் கால வைப்பு (Term deposits) மற்றும் சிறப்பு கால வைப்புகளும் (special term deposits) அடங்கும்.
  • திட்டக் காலத்தின் முடிவில் வாடிக்கையாளரின் கணக்கில் TDSன் நிகர வட்டியை வங்கி டெபாசிட் செய்யும்.
  • FD திட்டத்தில் TDS வருமான வரிச் சட்டத்தின்படி கழிக்கப்படும்.
  • முதலீட்டாளர்கள் படிவம் 15G/15H ஐப் பயன்படுத்தி வருமான வரி விதிகளின் கீழ் வரி விலக்கிலிருந்து விலக்கு கோரலாம்.
  • எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டத்தில் கடன் வசதி உள்ளது.
  • தவிர, முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
  • வாடிக்கையாளர்கள் அம்ரித் கலாஷ் திட்டத்தில் எஸ்பிஐயின் உள்ளூர் கிளைக்குச் சென்று, நெட்பேங்கிங் மூலம் அல்லது எஸ்பிஐ யோனோ மொபைல் செயலியைப் பயன்படுத்தி முதலீடு செய்யலாம்.

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாட்டில் செலவு செய்தால் TCS வரி இல்லை.. மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios