ரெப்போ விகிதம் 5.25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், சில்லறை பணவீக்கம் வரலாற்று குறைந்த நிலையை எட்டியுள்ளது. பணவீக்கம் இலக்கு வரம்பிற்குள் இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைகளை “அரிய கோல்டிலாக்ஸ் காலம்” என ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். அதாவது அதிக பொருளாதார வளர்ச்சி + குறைந்த பணவீக்கம் எனும் சமநிலையை குறிப்பிடுகிறார்.
ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைவு
மூன்று நாள் நிதிக் கொள்கை மதிப்பாய்வு கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ விகிதம் 5.25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. "2025-இன் சவால்களை இந்தியா நெகிழ்ச்சியுடன் எதிர்கொண்டது. வளர்ச்சி உறுதியாக தொடர்கிறது," என மல்ஹோத்ரா கூறினார்.
பணவீக்கம் வரலாற்று குறைந்த நிலைக்கு ஆளுநர் மல்ஹோத்ரா குறிப்பிட்டதாவது, Q2-ல் சில்லறை பணவீக்கம் வெறும் 1.7%, அக்டோபரில் 0.3% வரை சரிவு ஆகும். இதில் உணவுப் பொருள் விலை குறைவானதே முக்கிய காரணம். நுகர்வோர் விலை பட்டியலில் உள்ள பொருட்களில் 80% இப்போது 4% குறைவான பணவீக்கத்தைக் காட்டுகின்றன.
ஆர்பிஐ புதிய கணிப்பு
2025–26-க்கான பணவீக்கம் 2% என்ற புதிய மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது.
- Q3 — 0.6%
- Q4 — 2.9%
- 2026 Q1 — 3.9%
- 2026 Q2 — 4.0%
என ஆர்பிஐ இலக்கு வரம்பான 2–6% க்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மை வளர்ச்சி
பணவீக்கம் தணிந்தாலும், வளர்ச்சி வலுவாக உள்ளது. H1 2025–26-ல் GDP வளர்ச்சி 8% மற்றும் பணவீக்கம் 2.2% ஆகும். வங்கி அமைப்பில் நீடித்த பணப்புழக்கத்தை உறுதி செய்ய, ரூ.1 லட்சம் கோடி OMO கொள்முதல், 3 ஆண்டுக்கு $5 பில்லியன் USD–INR வாங்குதல்–விற்பனை பரிமாற்றம்என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு $686.2 பில்லியன், 11 மாத இறக்குமதிக்குப் போதுமானது. “சவாலான உலகச் சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் திகழ்கிறது. தொடர்ந்து நிறைவேற்றுவோம்,” என ஆளுநர் மல்ஹோத்ரா உரையை முடித்தார்.


