SBI, HDFC, ICICI.. வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கியை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகள் (D-SIB) பட்டியலில் தக்கவைத்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பான 3 வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கி, இந்த ஆண்டு மீண்டும் D-SIB (உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகள்) தங்கள் பட்டியலில் நிலையைத் தக்க வைத்துள்ளன. எளிதாக சொன்னால், இந்த வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானவை. இவை பாதிக்கப்படுவதை அரசு கூட சமாளிக்க முடியாது. அதனால் இந்த வங்கிகளுக்கு கடுமையான நிர்வாக மற்றும் நிதி பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்படுகின்றன.
வங்கி கண்காணிப்பு
இந்த பட்டியலில் உள்ள வங்கிகள் எப்போதும் பாதுகாப்பாக செயல்பட வேண்டியதால், அவர்களின் நிதி நிலை வலுவாக இருக்க கூடுதல் மூலதனம் CET1 (பொது பங்கு அடுக்கு 1) வைத்திருக்கும் வேண்டும். RBI விளக்கம் படி, ICICI வங்கி 0.10%, HDFC வங்கி 0.40% மற்றும் SBI 0.80% அதிக CET1 மூலதனத்தை வைத்திருக்க வேண்டும். இதன் மூலம், பொருளாதார சிக்கல்களில் கூட வங்கி செயல்பாடுகள் பாதிக்கப்படாதபடி பாதுகாக்கப்படுகிறது.
பாதுகாப்பு வங்கிகள்
அதாவது, இவை சரிந்தால் நாடு முழுவதும் நிதி அமைப்பு சீர்குலையும். அதனால், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மேலாண்மை விதிகளை கடுமையாக்குகிறது. D-SIB பட்டியலில் உள்ள வங்கிகள் வழக்கமான வங்கிகளை விட அதிக CET1 மூலதனத்தை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய வித்தியாசமாகும்.
ரிசர்வ் வங்கி
இந்த D-SIB அமைப்பு 2014 ஜூலை 22 அன்று RBI அறிமுகப்படுத்தியது. 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் எந்த வங்கிகள் இந்த பட்டியலில் உள்ளன என்பதை RBI அறிவித்து வருகிறது. நாட்டின் நிதி அமைப்பில் அதிக தாக்கம் கொண்ட வங்கிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றின் மூலதனத்தை கூடுதலாக வைத்திருக்க RBI கட்டாயப்படுத்தப்படுகிறது. மேலும், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கி Global Systemically Important Bank (G-SIB) பட்டியலில் இருந்தால், அந்த வங்கியும் இந்தியாவில் கூடுதல் மூலதனம் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

