MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • திருமணம், சுற்றுலாவுக்கு முழு ரயிலை புக் செய்யலாமா.? டெபாசிட் தொகை இவ்வளவு கட்டினால் போதும்

திருமணம், சுற்றுலாவுக்கு முழு ரயிலை புக் செய்யலாமா.? டெபாசிட் தொகை இவ்வளவு கட்டினால் போதும்

இந்திய ரயில்வேயின் FTR சேவையின் மூலம், திருமணம் போன்ற பெரிய குழு நிகழ்ச்சிகளுக்கு ஒரு முழு கோச் அல்லது ரயிலையே முன்பதிவு செய்யலாம். இந்த வசதி குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இதனைப் பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 19 2026, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திருமண ரயில் புக்கிங்
Image Credit : Getty

திருமண ரயில் புக்கிங்

பெரிய குடும்ப நிகழ்ச்சிகள், யாத்திரைகள் அல்லது நண்பர்கள் குழு சுற்றுலா என்றால் பொதுவாக பஸ் அல்லது கார்கள் தான் தேர்வு செய்யப்படுகின்றன. ஆனால் இந்திய ரயில்வேயில் முழு கோபங்கள் அல்லது ஒரு முழு ரயிலையே முன்பதிவு செய்யும் வசதி இருப்பது பலருக்கு தெரியாது. குழுவாகப் பயணம் செய்ய விரும்புவோருக்கு இது சுவாரஸ்யமான மற்றும் சௌகரியமான தேர்வாக உள்ளது.

25
குழு பயண ரயில் வசதி
Image Credit : Getty

குழு பயண ரயில் வசதி

இந்த சேவை ஐஆர்சிடிசியின் முழு கட்டண விகிதம் (FTR) முறையின் கீழ் வழங்கப்படுகிறது. ftr.irctc.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். திருமணம், கல்வி பயணம், ஆன்மிக யாத்திரை அல்லது தனியார் நிகழ்ச்சிகள் போன்ற காரணங்களுக்காக இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கேற்ப ஒரு கோச்சை மட்டுமே அல்லது முழு ரயிலையே தேர்வு செய்யலாம்.

Related Articles

Related image1
தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியப்போகுது.. ரஷ்யாவின் டாலர் முடிவால்… குஷியில் பொதுமக்கள்
Related image2
ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?
35
ரயில்வே டெபாசிட் தொகை
Image Credit : stockPhoto

ரயில்வே டெபாசிட் தொகை

ஒரு கோச்சை முன்பதிவு செய்ய சுமார் ரூ.50,000 பாதுகாப்பு டெபாசிட் செலுத்த வேண்டும். முழு 18 கோச்சுகள் கொண்ட ரயிலை புக் செய்ய ரூ.9 லட்சம் டெபாசிட் தேவை. இது இறுதி கட்டணத்தில் சரிசெய்யப்படும் முன்பணம் ஆகும். சாதாரண டிக்கெட் கட்டணத்தை விட சுமார் 30% அதிக கட்டணம் விதிக்கப்படும். தூரத்தைப் பொறுத்து சேவை கட்டணமும் இருக்கும்.

45
6 மாதங்களுக்கு முன்பே புக் செய்யலாம்
Image Credit : Getty

6 மாதங்களுக்கு முன்பே புக் செய்யலாம்

முன்பதிவு செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். அதிகபட்சம் 6 மாதங்களுக்கு முன்பே புக் செய்ய அனுமதி உண்டு. வந்தே பாரத், ராஜ்தானி போன்ற பிரீமியம் ரயில்கள் இதில் சேர்க்கப்படவில்லை. மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இந்த வசதியில் கிடைக்கும்.

55
தனியார் நிகழ்ச்சி ரயில்
Image Credit : https://erail.in/

தனியார் நிகழ்ச்சி ரயில்

பெரிய குழுவுடன் ஒரே ரயிலில், ஒரே இடத்தில் பயணம் செய்ய விரும்புவோருக்கு இது தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. ரயில்வே விதிமுறைகளை பின்பற்றி முன்பதிவு செய்தால், பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் பயணத்தை திட்டமிட முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டிப் போக்குவரத்து
ரயில்
ரயில் டிக்கெட் முன்பதிவு
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியப்போகுது.. ரஷ்யாவின் டாலர் முடிவால்… குஷியில் பொதுமக்கள்
Recommended image2
ரூ.18,000 சம்பளம் ரூ.58,500 ஆகுமா.? மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சம்பள உயர்வு!
Recommended image3
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? கவலையை விடுங்க.. வந்தாச்சு ஆதார் செயலி.. முழு விவரம் உள்ளே!
Related Stories
Recommended image1
தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியப்போகுது.. ரஷ்யாவின் டாலர் முடிவால்… குஷியில் பொதுமக்கள்
Recommended image2
ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved