MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?

ரூ.3.70 லட்சத்தில் 6 ஏர்பேக்.. 33 கிமீ மைலேஜ்.. கேம் சேஞ்சர் கார் எது தெரியுமா?

மாருதி சுசூகியின் ஆல்டோ கே10, ஜனவரி 2026-ல் 12,314 யூனிட்கள் விற்பனையாகி மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ரூ.3.70 லட்சம் ஆரம்ப விலையில், சிறந்த மைலேஜ், 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 19 2026, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.4 லட்சத்திற்குள் கார்
Image Credit : Maruti Suzuki

ரூ.4 லட்சத்திற்குள் கார்

ரூ.3.70 லட்சத்தில் பாதுகாப்பு, மைலேஜும், நம்பிக்கையும்... இவை மூன்றையும் ஒரே கார் தருமா? இந்திய குடும்பங்களின் பதில் "ஆம்" என்பதே. சிறிய கார்கள் விற்பனை சற்று சரிந்த சூழலிலும், மாருதி சுசூகியின் ஆல்டோ கே10 ஜனவரி 2026-ல் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. அந்த மாதம் மட்டும் 12,314 குடும்பங்கள் இந்த ஹாட்ச்பேக்கை தேர்வு செய்துள்ளன. இதன் மூலம் குறைந்த செலவில் நம்பகமான கார் என்ற பெயரை ஆல்டோ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

25
குறைந்த விலை ஹாட்ச்பேக்
Image Credit : maruti suzuki

குறைந்த விலை ஹாட்ச்பேக்

ரஷ்லன் வெளியிட்ட தகவலின்படி, ஜனவரி 2025-ல் விற்ற 11,352 யூனிட்டுகளை விட 962 கார்கள் அதிகமாக விற்றுள்ளன. இது ஆண்டு அடிப்படையில் 8.47 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. மேலும், டிசம்பர் 2025-இல் இருந்து 10,829 யூனிட்டுகளை விட 13.71 சதவீத உயர்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடும் போட்டி நிலவும் சந்தையிலும், ஆல்டோவின் தேவை குறையாதது கவனிக்கத்தக்கது.

Related Articles

Related image1
95 கிமீ மைலேஜ் தரும் சுசுகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 7 ஆண்டு உத்தரவாதம்.. விலை எவ்வளவு?
Related image2
விலை ரூ.2 லட்சம் கூட இல்லைங்க.. 15 வண்ணங்களில் ஜாவா 42 அறிமுகம்.. விலை. அம்சங்கள் உள்ளே
35
நகர போக்குவரத்துக்கு ஏற்ற கார்
Image Credit : Maruti Suzuki

நகர போக்குவரத்துக்கு ஏற்ற கார்

ஹியர்டெக்ட் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த கார், 1.0 லிட்டர் K-சீரிஸ் Dual Jet, Dual VVT பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. இது 65.7 bhp சக்தியும், 89 Nm டார்க்கும் வழங்குகிறது. 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களில் AGS ஆப்ஷனும் கிடைக்கிறது. நகர போக்குவரத்துக்கு ஏற்ற எளிய வடிவமைப்பு இதன் பலமாக உள்ளது.

45
ஆல்டோ கே10 மைலேஜ்
Image Credit : maruti suzuki

ஆல்டோ கே10 மைலேஜ்

மைலேஜ் விஷயத்தில் ஆல்டோ கே10 முன்னிலை வகிக்கிறது. பெட்ரோல் மாடலில் 24.90 கிமீ/லிட்டர் வரை, சிஎன்ஜி மாடலில் 33.40 கிமீ/கிலோ வரை மைலேஜ் வழங்குகிறது. மேலும், அடிப்படை மாடலில்கூட 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ரிவர்ஸ் பார்கிங் சென்சார், ESP போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

55
ஆல்டோ ஜனவரி 2026 விற்பனை
Image Credit : our own

ஆல்டோ ஜனவரி 2026 விற்பனை

உள்ளமைப்பிலும் 7-இஞ்ச் டச் ஸ்கிரீன், Apple CarPlay, Android Auto, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் போன்ற வசதிகள் உள்ளன. ரூ.3.70 லட்சம் ஆரம்ப விலையுடன் கிடைக்கும் இந்த கார், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் விரிவான சேவை வலையமைப்பு காரணமாக நடுத்தர மக்களின் நம்பிக்கை தொடர்ந்து காக்கிறது. SUV களின் ஆட்டம் நடக்கும் சந்தையிலும், சிறிய கார்கள் இன்னும் உயிருடன் இருப்பதை ஆல்டோ நிரூபித்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி
மாருதி கார்
ஆல்டோ கார்
குறைந்த விலை கார்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விலை ரூ.2 லட்சம் கூட இல்லைங்க.. 15 வண்ணங்களில் ஜாவா 42 அறிமுகம்.. விலை. அம்சங்கள் உள்ளே
Recommended image2
டாடா-வின் கோட்டையைத் தகர்க்குமா கியா? சைரோஸ் EV-யின் மெர்சல் அம்சங்கள்!
Recommended image3
உருவத்தில் க்விட்... குணத்தில் கைகர்..! ரெனால்ட்டின் அடுத்த அதிரடி வேட்டை ஆரம்பம்..!
Related Stories
Recommended image1
95 கிமீ மைலேஜ் தரும் சுசுகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 7 ஆண்டு உத்தரவாதம்.. விலை எவ்வளவு?
Recommended image2
விலை ரூ.2 லட்சம் கூட இல்லைங்க.. 15 வண்ணங்களில் ஜாவா 42 அறிமுகம்.. விலை. அம்சங்கள் உள்ளே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved