MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரெப்போ வட்டி மாறுமா.? டிசம்பர் 5-ல் ஆர்பிஐ எடுக்கப்போகும் முடிவு என்ன?

ரெப்போ வட்டி மாறுமா.? டிசம்பர் 5-ல் ஆர்பிஐ எடுக்கப்போகும் முடிவு என்ன?

பேங்க் ஆஃப் பரோடா அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் 5 நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்ற வாய்ப்புள்ளதா? என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Dec 02 2025, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ரிசர்வ் வங்கி அப்டேட்
Image Credit : X

ரிசர்வ் வங்கி அப்டேட்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை அதிகம் வெளியிடும் நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 5.50% ஆகவே வைத்திருக்கும் வாய்ப்பு என பேங்க் ஆஃப் பரோடா தனது சமீபத்திய அறிக்கைகளில் கூறியுள்ளது. ஆர்பிஐ தனது தற்போதைய ‘நடுநிலை’ நிலைப்பாட்டையும் தொடரும் எனவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. “டிசம்பர் 25 கொள்கை கூட்டத்தில் விகிதம் நிலையாக இருக்கும். நிலைப்படுத்தும் அணுகுமுறை தொடரும்,” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கை இந்தியாவின் பொருளாதார நிலை தொழில்நுட்ப ரீதியாக உறுதியானது என்பதை வலியுறுத்துகிறது. 2026 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் உருவான 8.2% GDP வளர்ச்சி எதிர்பார்த்ததை மீறியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ரெப்போ விகிதம்
Image Credit : Getty

ரெப்போ விகிதம்

நகர்ப்புற நுகர்வு உறுதி மற்றும் கிராமப்புற தேவை நிலைத்திருப்பது மூன்றாம் காலாண்டிலும் வளர்ச்சியை தக்க வைத்திருக்கும் வாய்ப்பு உள்ளது. விலை நிலைமையைப் பற்றி பேசும் போது, ​​பணவீக்கம் தெளிவாகக் குறைந்து வருவதாக அறிக்கை முன்வைக்கிறது. உணவுப் பொருட்களின் விலை சரிவால், 2025 அக்டோபரில் சிபிஐ பணவீக்கம் 0.25% ஆக குறைந்தது. மழை, விநியோக நடவடிக்கைகள், மேம்பட்ட உற்பத்தி சூழல் ஆகியவை பணக்க சுமையைக் குறைத்துள்ளன. முக்கியப் பணவீக்கம் 4% மேலே இருந்தாலும், தங்கவிலை உயர்வால் ஏற்பட்டதாகவும் GST விகிதங்கள் அதன் தாக்கத்தை ஓரளவு சமன்படுத்தியதாகவும் ஆய்வு கூறுகிறது.

33
டிசம்பர் 5
Image Credit : ANI

டிசம்பர் 5

இந்நிலையில் ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும் போது எச்சரிக்கையுடன் தாமதமாகலாம் என அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே சில ஆதரவு கொள்கைகள் அமலில் உள்ளதால், அதன் விளைவுகள் சந்தையில் முழுமை பெற சிறிது நேரம் தேவை. அதனால் தற்போதைய விகிதத்தை வைத்திருப்பது மிகச் சிறந்த முடிவு என நிதி வட்டாரங்கள் கருதுகின்றன. கொள்கை முடிவு டிசம்பர் 5 காலை 10 மணிக்கு ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Smartwatches Under 5000: 5000 ரூபாய்க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்வாட்ச்கள்!
Recommended image2
KVP Scheme: ரூ.5 லட்சம் முதலீடு.. ரூ.10 லட்சம் கையில்.! மத்திய அரசின் சூப்பர் சேமிப்பு திட்டம்..!
Recommended image3
உடன்பிறந்தவர்களுக்கு தெரியாமலேயே பரம்பரை சொத்தை விற்க முடியுமா? சட்டம் சொல்லும் அதிரடி பதில்!
Related Stories
Recommended image1
வங்கி கணக்கு மூடுகிறீர்களா? இந்த தவறுகள் செய்தால் பெரிய நஷ்டம்!
Recommended image2
பழைய பேங்க் அக்கவுண்ட் இருக்கா? மறந்துபோன பணத்தை இப்படியும் எடுக்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved