Nirmala Sitharaman: பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு! பட்ஜெட் உரையில் சிரிப்பலை!
பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாய் தவறி ஒரு வார்த்தை சொன்னது நாடாளுமன்றத்தில் சிரிப்பலையை உருவாக்கியது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் அவர் வாய் தவறி ஒரு வார்த்தை தவறாக உச்சரித்தது நாடாளுமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
2023-24ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட்டாகவும் இது அமைந்தது.
2019ஆம் ஆண்டு முதல் நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாகவும் உள்ளது.
இந்த பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் 86 நிமிடங்களில் முடித்திருக்கிறார். ஓர் இடத்தில் பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவது பற்றி பேசும்போது, ‘old polluting vehicles’ (மாசுபடுத்தும் பழைய வாகனங்கள்) என்பதற்குப் பதிலாக ‘old political...’ (பழைய அரசியல்...) என்று கூறிவிட்டார்.
நிர்மலா சீதாராமன் இவ்வாறு தவறாக உச்சரித்ததைக் கேட்டதும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அப்போது நிதி அமைச்சரும் புன்னகையுடன் தனது தவறைத் திருத்திக்கொண்டு சரியாக வாசித்தார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்ஜெட் உரையின் முழுமையான வீடியோவில் 50 ஆவது நிமிடத்தில் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி சிரிப்பலை காட்சியைக் காணலாம்.
Budget 2023: ஒன்றுமே இல்லாத பட்ஜெட்! தொழில் வர்த்தக சபை கடும் அதிருப்தி